TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.10.2023
நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்:
வனத்துறை சார்பில் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிப்பு:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் தமிழர் நாகரிகம் சிறந்தோங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், முன்னோர்கள் பல்வேறு வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
சாகர் கவாச் ((Sagar Kavach) பாதுகாப்பு ஒத்திகை:
6 மாதங்களுக்கு ஒரு முறை காவல் துறையினால் நடத்தப்படும் சாகர் கவாச் ((Sagar Kavach) பாதுகாப்பு ஒத்திகையானது தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இரண்டு நாள் நடைபெற்றுள்ளது.
சாகர் கவாச் ஒத்திகையானது 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலை நடத்தப்படுகிறது.
அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தும் சட்ட மசோதா:
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சென்னை, சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வரி உயர்வு போக்குவரத்தில் பல்வேறு வரி விதிப்பு முறைகளை பல்வேறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து பெறப்படும் வருமானம் குறைவாக உள்ளது. இதனால் அரசுக்கு குறைவான வருவாய்தான் கிடைக்கிறது. எனவே மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. அந்த திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டம்: ஒழுங்குபடுத்த ஆணையம் அமைப்பு:
ஆன்லைன் சூதாட்டத்தை தடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் விதமாக, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம், 2022-ல் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தின்படி, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதீன், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.சி.சாரங்கன், கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.செல்லப்பன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற மருத்துவர் ஓ.ரவீந்திரன், இன்கேஜ் குழு நிறுவனர் விஜய் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனது இளைய பாரதம் :
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ல் இளைஞர் மேம்பாட்டுக்காக எனது இளைய பாரதம் என்ற தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அமைப்பானது 19 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் பயன்டையு வகையில் உருவாக்கப்பட்டது.
ககன்யான் திட்டம்: முதல்கட்ட சோதனை
மனிதா்களை விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையின் 400 கி.மீ. தொலைவுக்கு கொண்டுசென்று, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பல்வேறுகட்ட சோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முதல்கட்ட சோதனை அக். 21-இல் நடைபெறும் என மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
ஆபரேஷன் அஜய் (Operation Ajay):
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தீவிர மோதல் நடக்கிறது
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்து வர ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் கவாச் (Operation Kawch) :டெல்லி காவல் துறையானது போதைப்பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்க உருவாக்கிய திட்டமாகும்ஆபரேஷன் கருணா (Operation Karuna) :மியான்மரில் எற்பட்ட மேக்கா புயல் பாதிப்புகளுக்காக மியான்மருக்கு உதவ ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்ஆபரேஷன் கங்கா (Operation Ganga) :ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போரின் போது உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்ஆபரேஷன் காவேரி (Operation Kaveri) :சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவங்களுக்கிடையே போர் ஏற்பட்டபோது இந்தியர்களை மீட்கும் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்ஆபரேஷன் தோஸ்த் (Operation Dost) :இந்தியா நாடானது துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்திற்கு உதவ ஏற்படுத்திய திட்டம் ஆகும்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 12
12th October உலக மூட்டு வலி தினம் : கருப்பொருள்: “Living With an RMD at all stages of life”.
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment