நீலகிரி வரையாடு திட்டம்:
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை (First Nilgiri tahr Project in India) அமைத்து தமிழ்நாடு அரசு (டிச.28/2022) ஆணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில், ’இத்திட்டம் 2022 முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மேலும், நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் ஐம்பெருங்காப்பியங்களில் இரு காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியில் காணப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடு திட்டம் (Nilgiri tahr Project) :
நீலகிரி வரையாடு திட்டம், பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் (collaring) பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல், ஒவ்வோர் ஆண்டும் அக்.7–ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரி வரையாடு இனம், இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால், அழிந்து வரும் உயிரினம் என்று வகைப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. 3,122 வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை இவை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. மிகப் பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து அழிவுக்கு உள்ளாதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, பிற மானுடவியல் அழுத்தங்கள், சுற்றுச்சூழல் தரவு மற்றும் பாதுகாப்பு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாமை போன்ற காரணங்களால் தற்போது தமிழகம், கேரளாவுக்குள், சில சிதறிய வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.
இந்த புதிய திட்டம் மூலம், அவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, அவற்றுக்குரிய வாழ்விடங்களில் இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு, நீலகிரி வரையாடுகள் வாழ ஏதுவான சூழலை உருவாக்கி, அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 'நீலகிரி வரையாடு இனம் IUCN-னால், அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டு, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972–ல் முதல் அட்டவணையின்கீழ் பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கை (WWF) 2015-ன் படி 3,122 வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதி முக்கியமான பல்லுயிர் மண்டலம் என அங்கீகரிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை இவை வாழ்விடமாக கொண்டுள்ளன. மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து அழிவுக்கு ஆளாகுதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, பிற மானுடவியல் அழுத்தங்கள், சுற்றுச்சூழல் தரவு மற்றும் பாதுகாப்பு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாமை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் சில சிதறிய வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே இவை வாழ்ந்து வருகின்றன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'பதினெண்கீழ்க்கணக்கு, திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றால குறவஞ்சியில் “குறத்தி மலை வளம் கூறல்” பாடலிலும் வரையாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment