TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.10.2023

TNPSC PAYILAGAM
By -
0


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.10.2023

டாக்டர் எம்.எஸ்.வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் அமைந்துள்ள தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பெயரை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை அறிவியல் மற்றும் மரபியில் பிரிவில் சிறந்த மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பு(PLFS) 2020-21 :

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2020-21 வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பு(PLFS)  வெளியிட்டது. வழக்கமான நிலையின்படி ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2019-20ல் 4.8% இல் இருந்து 4.2% ஆக குறைந்துள்ளது.

சமாதானத் திட்டம்:

அக்டோபர் 16-லிருந்து வணிகர்களுக்கான சமாதானத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ளார்.

வணிகர்கள் தங்கள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தும் வகையில் தொடங்வுள்ள இத் திட்டமானது 2024 பிப்ரவரி 15 வரை நிலுவையில் இருக்கும்.

2017-ல் ஜி.எஸ்டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் எற்கனவே நடைமுறையில் உள்ள வரிச்சட்டங்களின் கீழ் உள்ள பழைய நிலவைத் தொகைகளை வசூலிப்பததிற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அகழாய்வில் -செப்பு நாணயங்கள்

கடலூர் மாவட்டத்தின் உளுந்தம்பட்டு பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் நடைபெற்ற கள அகழாய்வில் 2 சோழ பேரரசு காலத்தையும், 1 விஜயநகர பேரரசு காலத்தையும் சேர்ந்த 3 செப்பு நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சோழ கால நாணயத்தின் ஒருபுறத்தில் ஒருவர் கையில் மலர் ஏந்தி நின்றவாரும், அவரது இடது பக்கத்தில் 4 வட்டங்களும், மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன.

விஜயநரக கால நாணயத்தின் ஒருபுறத்தில் தேவநாகி எழுத்தில் ஸ்ரீநீலகண்டா எனவும் மற்றொரு புறத்தில் காளைஉருவமும், பிறையும் உள்ளன.

மொத்தம் 3 நாணயங்கள் கண்டுஎடுத்தனர் . அதில் 2 நாணயங்களில் சோழர் காலத்தை சேர்ந்த  தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீராஜராஜ” என பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் மீதம் இருந்த ஒரு நாணயத்தில்  விஜயநகர காலத்தை சேர்ந்த   தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீநீலகண்ட “என பொறிக்கப்பட்டுள்ளது தென் பண்ணை ஆற்றுபடுகையில் தொடர்ந்து சங்க காலம் முதல் சோழர் காலம் வரை பழங் கால மக்கள் வாழ்ந்தற்கான தொல்லியல் தடயங்கள் கண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

(EWS) பிரிவில் சட்டக் கல்லூரிகளிலும் 10%

பீகார் அரசு, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS) பிரிவில் உள்ளவர்களுக்கு, மாநிலத்தின் நீதித்துறை சேவைகளிலும், அரசு நடத்தும் சட்டக் கல்லூரிகளிலும் 10% இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் 23வது அமைச்சர்கள் மாநாட்டில் (IORA) :

இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் 23வது அமைச்சர்கள் மாநாட்டில் (IORA) இந்தியா சார்பில் எஸ்.ஜெயங்சர் பங்கேற்க உள்ளார்.

இந்திய பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் 2023-2025 ஆண்டுக்கான தலைமை பொறுப்பினை இலங்கையும், துணைத் தலைமை பொறுப்பினை இந்தியாவும் வகிக்க உள்ளன.

23 உறுப்பு நாடுகளை கொண்ட Indian Ocean Rim Association (IORA) அமைப்பானது 1997-ல் மொரிசியஸ்ஸினை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது.

46வது பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் கண்காட்சி :

46வது பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் கண்காட்சி புது டெல்லியில்  நடைபெற்றது . 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பசிபிக் ஆசிய பயண சங்கம் (PATA) பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்டு,ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறது.  இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற லாப நோக்கற்ற அமைப்பாகும். PATA டிராவல் மார்ட் என்பது சுற்றுலாத் துறைக்கு சேவை செய்யும் முக்கியமான சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாகும். மேலும் இது பெரும்பாலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த உலகளாவிய சுற்றுலா வர்த்தகம் தொடர்பான தொடர்புகளுக்கான தளமாக செயல்படுகிறது.

இந்திய செல்வந்தர்கள் பட்டியல் 2023 :

ஹுகுன் இந்தியா நிறுவனமானது 2023-ம் ஆண்டுக்கான இந்திய செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது

இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள்

முதலிடம் – முகேஷ் அம்பானி (ரூ.8.08 லட்சம்)

இரண்டாவது இடம் – கெளதம் அதானி (ரூ.4.47 லட்சம் கோடி)

மூன்றாவது இடம் – ஆதார் பூனா வாலா (ரூ.2.78 லட்சம் கோடி)

மகாத்மா காந்தி சிலை (Statue of Mahatma Gandhi) :

1910-ல் தொடங்கப்பட்ட டால்ஸ்டாய் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள 8 அடி உயர காந்தி சிலையை தென் ஆப்பிரிக்க இந்திய தூதரான பிரபாத் குமார் திறந்து வைத்தார்.

டால்ஸ்டாய் பண்ணையானது தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் அமைந்தள்ளது.

சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு:

கும்பகோணத்தின் சாஸ்த்ரா பல்கலைக்கழகமானது வழங்கிய 32 வயதிற்குட்பட்டோருக்கான 2023-ம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜன் பரிசானது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக உதவி பேராசிரியரான ரிபியாங் சாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

37வது தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதி ஓட்டம் :

கோவாவில் நடைபெற உள்ள 37வது தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதி ஓட்டம் தொடங்கியுள்ளது.

இதற்கு இலச்சினையாக கோவின் மாநில விலங்கான இந்திய காட்டெருமை (மோகோ – MOGA) என்னும் பெயரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியிலில் ஆடவர் இரட்டையர் பிரிவில்:

உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியிலில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை முதலிடம் பிடித்துள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்த சாதனை புரிந்துள்ளது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 11

11th October சர்வதேச பெண் குழந்தைகள் தினம் :ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலுக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய முயற்சியாகும். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது. பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களில் கவனம் செலுத்துவதற்கும், அவர்களின் அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நாள் நிறுவப்பட்டது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள், “பெண் குழந்தைகளின் உரிமைகளில்  முதலீடு செய்யுங்கள்” “பெண் குழந்தைகளின் உரிமைகள்: நமது தலைமை, நமது நல்வாழ்வு” என்பதாகும். “Invest in Girls Rights our Leadership & well – Being”

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!