TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.10.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.10.2023

கொடிகாத்த குமரன்-116 வது பிறந்த நாளை:

சட்ட மறுப்பு இயக்கம் போராட்டத்தில் பங்குகொண்டு திருப்பூர் குமரன் தன் உயிரை இழந்தார். இவர் 1907 ஆம் ஆண்டில் அக்டோபர் 4 ஆம் நாளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு 1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 ஆம் நாளில் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவரது 116 வது பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசு:

ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பில், நடப்பாண்டுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அமைச்சர்கள் மாநாடு

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அமைச்சர்கள் மாநாடானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள்:

பசுமை விருதுகள்

  • தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்)
  • ஆர்.வி. சஜீவனா (தேனி)
  • பி.என்.ஸ்ரீதர் (கன்னியாகுமரி)

வன மேலாண்மை விருதுகள்

  • எஸ்.ஆனந்த் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர்)
  • பகான் ஜெகதீஸ் (ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர்)
  • எம்.இளையராஜா (கன்னியாகுமரி வன உயிரின காப்பாளர்)

முதலமைச்சர் விருது

சாம்சன் (தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு)

 சமத்துவ சிலை:

அக்டோபர் 14-ல் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் திறக்கப்படவுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில்  19 அடி உயர அம்பேத்கர் சிலையானது  சமத்துவ சிலையாக நிறுவப்பட்டுள்ளது.

ஆர்மீனியா:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆர்மீனியா இணைவதற்கான தீர்மானத்தை ஆர்மீனியா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

அம்பைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது:

அம்பை :

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் அம்பை குறிப்பிடத்தக்கவர். 1944ல் கோவையில் பிறந்த இவரது இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. வரலாற்றாசிரியர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’ (தி ஃபேஸ் பிஹைண்ட் தி மாஸ்க்), ‘The Singer and the Song’ (தி சிங்கர் அண்ட் தி சாங்) என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. பெண்ணியச் சிந்தனைகளையும், பெண்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்கியுள்ளார். 

‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014) உள்ளிட்டவை இவரின் சிறுகதைகள். இவரின் கதைகள் ஆங்கிலத்தில் ‘A Purple Sea’ (தி பர்பிள் சீ), ‘In a Forest, A Deer’ (இன் ஏ ஃபாரஸ்ட், ஏ டீர்), உள்பட ஐந்து தொகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011), ’சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ சிறுகதைத் தொகுப்பிற்காக 2021 ஆம் ஆண்டுகிற்கான சாகித்ய அகாதெமி விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார். 'ஸ்பாரோ' (SPARROW-Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988-இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அம்பைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உலக தூதர்:

இந்தியாவில் நடைபெறும் 13வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உலக தூதராக சச்சின் டெண்டுல்கரை ஐசிசி (ICC) நியமித்துள்ளது.ICC – International Cricket Council

9வது மாலத்தீவு குடியரசு தலைவராக பதவியேற்றவர்  முகமது முய்சு:

9வது மாலத்தீவு குடியரசு தலைவராக பதவியேற்றவர்  முகமது முய்சு ஆவார் இவர் மாலத்தீவின் முற்போக்குக் கட்சி சார்ந்தவர் .இதற்கு முன் குடியரசு தலைவராக இருந்தவர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஆவார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு:

இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும், முதுகலைப் பட்டதாரி பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.-இந்திய விண்வெளி திட்டங்களின் முன்னோடிகள் PDF

தமிழ் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பட்டியல்:

  • இஸ்ரோ தலைவர் கே. சிவன், சந்திரயான்-1 மற்றும் 2
  • திட்ட இயக்குனர், மயில்சுவாமி அண்ணதுரை
  • திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநர் – இஸ்ரோ வி. நாராயணன்
  • சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர், ஏ. ராஜராஜன்
  • இஸ்ரோ விஞ்ஞானி எம். சங்கரன்
  • சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேல்
  • இஸ்ரோ விஞ்ஞானி எம். வனிதா
  • இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி
  • இஸ்ரோ- திரவ இயக்க வளாகத்தின் இயக்குநர், ஜே. அசீர் பாக்கியாஜ்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :


SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!