Thursday, October 5, 2023

சூளாமணி-TNPSC EXAM KEY POINTS NOTES PDF



பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐஞ்சிறுங்காப்பியங்கள்

சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.

  • இது ஒரு சமண காப்பியம்.
  • இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர்.
  • 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல்.

ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் * விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்:

சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்லான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

நூல்குறிப்பு:

  • இது ஐஞ்சிறு காப்பியங்களுள் தலைசிறந்த நூல்
  • வேறுபெயர்-சூடாமணி
  • சிரவணபெலகோலா குளத்துக் கல் வெட்டப்படி இதன் ஆசிரியர் – தோலாமொழித்தேவர்
  • தோலாமொழித்தேவர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்
  • தி விட்டன் என்னும் மன்னன் – சுயப் பிரபை என்பவர்களைப் பற்றிய கதை, சேந்தன் (அவனி சூளாமணி மறாவர்மன்) என்னும் மன்னன் காலத்தில் அரங்கேற்றப் பெற்றது.
  • மூலக்கதை ஆருகத மகாப்புராணத்தை தழுவியது
  • கதை கூறும் போக்கில் சீவகசிந்தாமணியை ஒட்டியுள்ளது.
  • பலராமன் கண்ணன் போன்று இதில் திவிட்டன் – விசயன் விளங்குகின்றார்.

பெயர்க்காரணம்:

மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

கதைச் சுருக்கம்:

இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.

சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளியும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

TNPSC EXAM KEY POINTS -CHULAMANI

  • நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
  • இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
  • சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
  • “சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
  • “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ



No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: