பகுதி – (ஆ) – இலக்கியம்-பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.
- திருமுருகாற்றுப்படை-THIRUMURUGARRUPPADAI TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- பொருநராற்றுப்படை-PORUNARATRUPADAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- சிறுபாணாற்றுப்படை- SIRUPANATRUPADAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- பொரும்பாணாற்றுப்படை-PERUMPANATRUPADAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- மலைபடுகடாம்-MALAIPADUKADAM-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- மதுரைக்காஞ்சி-MADURAIKANCHI -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- குறிஞ்சிப்பாட்டு-KURINCHIPATTU-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- பட்டினப்பாலை-PATTINAPALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- முல்லைப்பாட்டு-MULLAIPATTU-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- நெடுநல்வாடை-NEDUNALVADAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
பத்துப் பாட்டால் அறியலாகும் செய்திகள்:
இத்தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழர் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன. இதனால் இயற்கை ஓவியம் என்று பத்துப்பாட்டு அழைக்கப்படுகிறது.
நூல்கள் |
ஆசிரியர் |
தலைவன் |
பாடலின் அடி |
திருமுருகாற்றுப்படை |
நக்கீரர் |
முருகன் |
317 |
பொருநராற்றுப்படை |
முடத்தாமக் கண்ணியார் |
கரிகாலன் |
248 |
சிறுபாணாற்றுப்படை |
நல்லூர் நத்தத்தனார் |
நல்லியக்கோடன் |
269 |
பெரும்பாணாற்றுப்படை |
கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
இளந்திரையன் |
500 |
மலைபடுகடாம் |
பெருங்கௌசிகனார் |
நன்னன் சேய் நன்னன் |
583 |
குறிஞ்சிப்பாட்டு |
கபிலர் |
ஆரிய அரசன் பிரகதத்தன் |
261 |
முல்லைப்பாட்டு |
நப்பூதனார் |
|
103 |
பட்டினப்பாலை |
கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
கரிகாலன் |
301 |
நெடுநல்வாடை |
நக்கீரர் |
நெடுஞ்செழியன் |
188 |
மதுரைக்காஞ்சி |
மாங்குடி மருதனார் |
நெடுஞ்செழியன் |
782 |
- முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றியவை. மற்ற ஏழு நூல்களும் புறப்பொருள் பற்றியவை.
- ஏழனுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை, – பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப் படை ஆகிய இந்தும் ஆற்றுப் படையினைச் சார்ந்தவை.
- பரிசில் பெற்ற ஒருவன் பெறாதவனைப் பரிசில் அளிப்பவன்பாற் சென்று பயனடையக் கூறுவது ஆற்றுப்படையாகும்.
- அகப்பொருள் பற்றியவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி
- புறப்பொருள் பற்றியவை : குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
- அகமும் புறமும் கலந்து வருவது: நெடுநல்வாடை.
- இப்பத்துப்பாட்டின் சிற்றெல்லை 103 அடிகள், பேரெல்லை 782 அடிகளாகும்.
- பத்துப்பாட்டின் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டுள்ளது.
- பத்துப்பாட்டின் மிகப் பெரிய நூல் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டுள்ளது
- ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புறநூல்களாகும்
- ஏனைய ஐந்து நூல்களும் அகம்(முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை), புறம் (ஆற்றுப்படை நூல்கள் மற்றும் மதுரைக் காஞ்சி) சார்ந்தவைகளாகும்
- பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று. அது நெடுநல்வாடை