Saturday, September 23, 2023

முல்லைப்பாட்டு -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES



பகுதி – (ஆ) – இலக்கியம்-பத்துப்பாட்டு

முல்லைப்பாட்டு

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

முல்லைப் பாட்டு பொருள் :

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.

இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இது நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது. இந் நூல் குறித்து மறைமலைஅடிகள், முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.

* பொருள் = ஆற்றியிருத்தல்

* திணை = அகத்திணை(முல்லை)

* பா வகை = ஆசிரியப்பா

* அடி எல்லை = 103(பத்துப்பாட்டு நூல்களில் சிறியது)

பெயர்க்காரணம்:

* முல்லைத் திணையை பாடியதால் முல்லைப்பாட்டு எனப்பட்டது.

* “இல் இருத்தல் முல்லை” என்பது இதன் இலக்கணம்.

வேறு பெயர்கள்:

* நெஞ்சாற்றுப்படை

* முல்லை

பாடியவர்:

* இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்

* இவர் எட்டு தொகை நூல்களுள் ஒரு பாடலையும் பாடாதவர்.

தலைவன்:

* முல்லைப்பாட்டு அகநூல் என்பதால் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.

* இந்நூலில் வரும் “கானம் நந்திய செந்நிலப் பெருவழி” என்னும் தொடரை கொண்டு இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று சிலர் கூறுவர்.

உரை:

* இந்நூலுக்கு மறைமலையடிகள் ஆராய்ச்சி உரை எழுதி உள்ளார்.

KEY POINTS TNPSC EXAMS-MULLAIPATTU

  1. பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.
  2. முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாக கூறப்பட்டுள்ளன.
  3. முதல் 23 அடிகள் = தலைவியின் பிரிவித் துயர் கூறப்பட்டுள்ளது.
  4. அடுத்த 55 அடிகள் = அரசனின் பாசறை அமைப்பு, பாசறையின் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளது.
  5. அடுத்த பத்து அடிகள் தலிவியின் அவல நிலை கூறப்பட்டுள்ளது
  6. இறுதியில் முல்லைநிலத்தின் இயல்பும், தலைவன் நிலையும், கார் காலத்திற்குப் பிறகு கூதிர் காலத்தில் அவன் திரும்புதல் கூறப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள்:

  • நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை
  • அரும்பு அவிழ் அலறி தூஉய்க் கைதொழுது
  • பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
  • நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்குதடக்கை
  • நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
  • குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுரத்து
  • இரவுபகல் செய்யும் திண்பிடி ஒண்வாள்
  • விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: