Saturday, September 23, 2023

நெடுநல்வாடை -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES



பகுதி – (ஆ) – இலக்கியம்-பத்துப்பாட்டு

நெடுநல்வாடை

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

* திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)

* பாவகை = ஆசிரியப்பா

* அடி எல்லை = 188

பெயர்க்காரணம்

தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.

நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை

வேறு பெயர்கள்:

* பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்

* மொழிவளப் பெட்டகம்

* சிற்பப் பாட்டு

* தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.க)

புலவர், தலைவன்:

* பாடிய புலவர் = நக்கீரர்

* பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

உரை:

* கோதண்டபாணி பபிள்ளை உரை

* வேங்கடா செட்டியார் உரை

திரு.வி.காவின் கூற்று;

* நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.

* திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல * சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன என்றார்.

* திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.

KEY POINTS TNPSC EXAMS-NEDUNALVADAI

  1. இஃது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. 
  2. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. 
  3. பொதுவாகத் தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
  4. நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
  5. “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
  6. பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
  7. இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
  8. பேராசிரயர் சுந்தரம்பிள்ளை, இந்நூலை, பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ-    எத்துணையும் பொருட்கிசையும் இலக்கிணமில் கற்பனையே எனப் புகழ்கிறார்.

முக்கிய அடிகள்:

  • குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
  • வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
  • சிலரொடு திரிதரும் வேந்தன்
  • பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
  • மா மேயல் மறப்ப மந்தி கூர
  • பறவை பதிவான வீழ, கறவை
  • கன்று கோள் ஒழியக் கடிய வீசி


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: