Wednesday, September 20, 2023

THIRUMURUGARRUPPADAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES




பகுதி – (ஆ) – இலக்கியம்-பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம்

திருமுருகாற்றுப்படையின் உருவம்:

  • பொருள் = ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 317
  • பாடிய புலவர் = நக்கீரர்
  • பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்
  • வேறு பெயர்:முருகு,புலவராற்றுப்படை

பதிப்பு வரலாறு:

இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார். 1851-இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889-ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர். உரை விவரம்:

  • நச்சினார்க்கினியர் உரை
  • பரிமேலழகர் உரை
  • உரையாசிரியர் உரை
  • கவிப்பெருமாள் உரை
  • பரிதிக் குறிப்புரை
  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை

முருகனின் அறுபடை வீடு:

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

  • திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
  • திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
  • திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
  • திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
  • திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
  • பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)

கடவுள் வாழ்த்து போன்றது:

  • பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
  • பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
  • வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.

KEY POINTS TNPSC EXAMS-THIRUMURUGARRUPPADAI:

  1. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.
  2. 'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல் 'வழிப்படுத்தல்' என்னும் பொருள்படும். 
  3. "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. 
  4. தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று-"முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்" (அகம்:22) பாடல்வழி அறியமுடிகிறது.
  5. இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும். 
  6. இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.
  7. பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. 
  8. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க, திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.
  9. ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.
  10. அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன. பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்பனவாகும்.
  11. தொல்காப்பிய மரபு - 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்" திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. "அளியன் தானே முதுவாய் இரவலன்"- (முருகு. 284) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் 'கூத்தர் ஆற்றுப்படை' என்று கூறுவது போன்றது.
  12. முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
  13. இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
  14. மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
  15. நான்காம் பகுதி = திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
  16. ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
  17. ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
  18. பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
  19. நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
  20. ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
  21. முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.

முக்கிய அடிகள்:

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)

இழுமென இழிதரும் அருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)

ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்

கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: