TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.08.2023
- இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி சந்திரயான்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்துதற்காக பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும். நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (23.08.2023) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். 2019-ல் சந்திரயான் - 2 நிலவில் தனது தடத்தை பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா எனப் பெயர் சூட்டப்படுகிறது.இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் 2023
- பொலிவுறு நகரங்கள் (Smart City) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநில விருது பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது.STATE AWARD FOR BEST IMPLEMENTATION OF SMART CITIES PROGRAMME 2023
- தமிழக அரசின் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதா 2023-விற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு வழி வகை செய்ய இம்மசோதோ கொண்டு வரப்பட்டது.
- கிரிஸ் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருதானது (The Grand Cross of the Order of Honor Award) பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கிராம அட்லஸ் (Village Atlas) கோவாவின் மேயம் கிராமத்தை மையமாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இந்தியாவின் முதல் கிராம அட்லஸை வெளியிட்டுள்ளார்.
- முன்னாள் இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் தலைமையில் DRDO சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
- சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் மூன்று இடங்கள் முறையே ஸ்வீடன், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் பிடித்துள்ளன.
- உலக துப்பாக்கி சுடுதல் – அஜர்பைஜான் : மகளிர் 50 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் தியானா, சாக்ஷி சூரியவம்சி, கிரண் தீப் கெளர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். மகளிர் 50 மீ பிஸ்டல் பிரிவு – தியானா – வெண்கலம் மகளிர் 50 மீ பிஸ்டல் பிரிவில் தியானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவர் 50 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் ரவிந்தர் சிங், கமல்ஜீத், விக்ரம் ஷின்டே ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். ஆடவர் 50 மீ பிஸ்டல் பிரிவில் ரவிந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- நீரஜ் சோப்ரா ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன் போட்டியின் ஆடர்வருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நிரஜ்சோப்ரா (88.77 மீ), டி.பி.மானு (81.310, கிஷோர் ஜெனா (80.55) ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
ஆகஸ்ட் 2023 தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- 26th August :பெண்கள் சமத்துவ தினம் / Women’s Equality Day:
- 26th August:உலக நாய்கள் தினம் (International Dog Day)
No comments:
Post a Comment