TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.08.2023

TNPSC PAYILAGAM
By -
0


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.08.2023:

  1. 25.08.2023-ல் நாகப்பட்டினம், திருக்குவளையில் 1-5 வயதிற்குட்பட்ட அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான காலை உணவுத் திட்டத்தை மேலும் பல பள்ளி குழந்தைகள் பயனடையுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவுவாக்கம் செய்கிறார்.
  2. 2023 ஆகஸ்ட் 26-ல் நிலவினை ஆய்வு செய்ய ஜப்பான் நாடானது SLIM என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது
  3. சொல்லிமா-1 ராக்கெட் உதவியுடன் மல்லிக்யாங்-1 உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய வடகொரியா அரசின் முயற்சியானது தோல்வியில் முடிவடைந்துள்ளது
  4. கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற அந்த நாட்டு அதிபா் தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக முன்னாள் அதிபா் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மாகாண நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கௌண்டி சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டு 22 நிமிடங்கள் சிறைக்குள் இருந்தார். அவருக்கு சிறைக் கைதிகளுக்கான எண் P01135809 வழங்கப்பட்டது. பிறகு, 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பிணையாக செலுத்தி அவர் விடுதலையானார்.அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபா் டிரம்ப் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!