TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.08.2023
- இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி 23.08.2023 மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.CHANDRAYAAN 3 MISSION DETAILS IN TAMIL
- 4600 கோடி மதிப்பீட்டில் சென்னை அருகே பேரூர் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலைய திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தி கீழ் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது-கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் (Desalination Plant):
- டி.சுந்தரராமன் குழு (D.Sundararaman Committtee): முன்னாள் தேசிய சுகாதார திட்ட மைய நிர்வாக இயக்குநர் டி.சுந்தரராமன் தலைமையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த, திட்டமானது தனியார் மருத்துவமனைகளில் தடையின்றி செயல்படுத்தவும் தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் பொம்மை நூலகமானது மகாரஷ்டிராவின் மும்பை நகரில் அமைக்கப்பட்டுள்ளது
- நீரக்ஷி (Neerakshi): கார்டர்ன் ரீச் கப்பல் கட்டமைப்பு & பொறியியல் நிறுவனம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனம் சார்பில் நீருக்கடியிலுள்ள கண்ணி வெடிகளை கண்டறிய கடலடி வாகனாமான நீரக்ஷி உருவாக்கப்பட்டுள்ளது.
- மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவால் மத்திய பிரேசத்தின் டாடியா விமான நிலையத்திற்கு (Datia Airport) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 3.5 டன் எனடை வரையிலான மோட்டார் வாகனங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய கார் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டமானது (பாரத் என்சிஏபி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- சச்சின் டெண்டுல்கரை (Sachin Tendulkar) இந்திய தேர்தல் ஆணைய தேசிய தூதராக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நியமித்துள்ளது. இவர் தேசிய தூதராக 3ஆண்டுகளுக்கு நியமிக்கபட்டுள்ளார் 25.01.1950-ல் புதுதில்லியை தலைமையகமாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் இயங்குகிறது.
- BPCL-ன் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1976-ல் மும்பையை தலைமையிடமாக கொண்டு BPCL செயல்பட்டு வருகிறது. Bharat Petroleum Corporation Limited – 1976
- BRICS கூட்டமைப்பின் 15வது பிரிக்ஸ் உச்சிமாநாடானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறுது.பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடர்புடைய செய்திகள்
- அஜா்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.