TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.08.2023
- அரசுத் துறையில் புதுமையான முயற்சிகளின் மூலம் திட்டங்களை செயல்படுத்துவோர்க்கான நல்லாளுமைக்கான விருதுக்கு 4பேர் தேர்வு செய்யப்பட்டள்ளனர்.-TAMIL NADU GOVERNMENT AWARDS LIST 2023 / தமிழக அரசு விருதுகள்: 2023
- தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- இந்தியாவின் பழங்கால நாகரிக மாண்புகள், கலாச்சார பரிணாமங்கள், வளமான மற்றும் ஒளிமை மிக்க பண்புகள் குறித்து 17 மொழிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் விளையாடப்பட்ட உலகின் மிகப்பெரிய விநாடி வினாப் போட்டிகளில் ஒன்றான ஜிக்யாசாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
- நாட்டில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த மாதம் அதிகரித்ததன் காரணமாக, சில்லறை விலை பணவீக்கமானது 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நிா்ணயித்துள்ள 2 முதல் 6 சதவீத அளவு என்பதை விட அதிகபட்சமாகும்.நகரப்பகுதிகளில் பணவீக்கம் 7.2 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 7.63 சதவீதமாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரலில் பணவீக்கம் 7.79 சதவீதமாக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் பணவீக்கம் 6.71 சதவீதமாக இருந்தது.
- சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகே 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- தமிழ் எழுத்துக்களால் ஆன 20 அடி வள்ளுவர் சிலையானது கோவையில் அமைக்கப்பட்டுள்ளது
- இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு புது தில்லியைச் சேர்ந்த கலைஞர் நம்ரதா குமார் அவர்களால் வரையப்பட்ட ஓவியம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரிமாக (கூகுள் டூடுல்) வைக்கப்பட்டுள்ளது.கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்கள், பரதநாட்டியம் போன்ற நிகரில்லா கலை வடிவங்கள் என கலைகளின் பிறப்பிடமாக உள்ள மாநிலத்திலிருந்து கண்ணைக் கவரும் காஞ்சீவரம் சேலைகள் உள்ளிட்ட ஆடைகளின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஓவியம் பகிரப்பட்டுள்ளது. இந்த கூகுள் டூடுல் (Google Doodle) மூலம், காஞ்சீவரம் ஆடை மற்றும் இந்தியாவில் திறமையாக வடிவமைக்கப்படும் இன்னும் பல ஆடைகளின் பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னையின், கோவளத்தில் நடைபெறும் சர்வதேச அலைசறுக்கு போட்டியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்
- மத்திய பிரதேசத்தின் பத்துமா கிராமத்தில் 11 ஏக்கரில் ரூ.100 கோடி செலவில் துறவி ரவிதாஸுக்கு கோவில் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
- ஹத்னிகுண்ட் அணையானது ஹரியானாவில் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது
- நீருக்கடியில் செல்லும் விதமாக உள்நாட்டு தயாரிக்கப்பட்ட வாகனம் நீராக்ஷி ஆகும்
- 2027-க்குள் யானைக்கால் நோய் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2030-க்குள் ஹெபடைடிஸ்-பி எனும் கல்லீரல் அழற்சி நோய், காசநோயை ஒழிக்கவும், 2047-க்குள் தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோயை ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்திராகாந்தி ஸ்மார்ட் போன் திட்டத்தின் (Indira Gandhi Smartphone Program) மூலம் பெண்களுக்கு கைபேசி வழங்கப்படும் திட்டமானது ராஜஸ்தான் தொடங்கப்பட்டுள்ளது
- பலூசிஸ்தான் அவாமி கட்சியின் அன்வர் உல் ஹக் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார்
- கனடா மாஸ்டா்ஸ் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னா், மகளிா் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
- மத்திய அரசின் முதன்மைக் கல்வித் திட்டத்தில் (பி.எம்.உஷா திட்டம்)14 மாநிலங்கள் இன்னும் இணையவில்லை.PM-Uchchatar SHiksha Abhiyan scheme / பி.எம்.உஷா திட்டம்
No comments:
Post a Comment