- பேராசிரியா் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டத்தையடுத்து அதற்கான உரிமைத்தொகையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான தொகை ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அவரது துணைவியாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 14.08.23 வழங்கினார்.இதுவரை 173 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.87 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள்வரை சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு, பேராசிரியர் க. அன்பழகன், முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது, நெல்லை கண்ணன், கந்தர்வன் என்கிற நாகலிங்கம், சோமலே, முனைவர் ந. இராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகிய 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
- சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவத் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள இந்த செயற்கைக் கோள், சூரியனை ஆய்வு செய்யவுள்ளது. பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு செயற்கைக் கோள் வந்தடைந்ததாகவும், இந்த செயற்கைகோளானது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் இறுதியில் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.1.சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க், 2,கோவை மாவட்ட எஸ்.பி., பத்தி நாராயணன், 3.தேனி மாவட்ட எஸ்.பி -பிரவீன் உமேஷ் டோங்கரே, 4.சேலம் ரெயில்வே டி.எஸ்.பி-குணசேகரன், 5.நாமக்கல்லைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன், 6.காவலர் குமார்
- வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் அக்டோபா் 10, 11-ஆம் தேதிகளில் பாதுகாப்புத் தொழில்நுட்ப கண்காட்சி நாட்டின் வடகிழக்கில் நடைபெறுவது இதுவே முதல்முறை.
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்திய எஃப்.ஐ.எச் தரவரிசையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
- மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியின்21-வது சுற்றில் இந்திய வீராங்கனை தீக்ஷா தாகர் சாம்பியன் பட்டம் வென்றார்.
- .இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 2023 அன்று கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான தீம் “தேசம் முதலில், எப்போதும் முதல்” என்பதாகும்.
- சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து MakeMyTrip ஆனது ‘Traveller’s Map of India’ என்ற சிறப்பு மைக்ரோசைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் பயணிகளை ஊடாடும் வகையில் ஈடுபடவும், இந்தியாவில் உள்ள மறைந்திருக்கும் சுற்றுலாப் பொக்கிஷங்களை அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கண்டறியவும் உதவுகிறது.இந்த நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மைக்ரோசைட்டின் உருவாக்கம், இந்திய அரசின் முன்னோக்கிய ‘தேகோஅப்னாதேஷ்’ திட்டத்துடன் தடையின்றி ஒத்துப்போகிறது.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.08.2023
By -
August 14, 2023
0
Tags: