ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் (அயோத்தி தாம்) :
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் (அயோத்தி தாம்) திட்டத்தை தொடங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர் மக்களுக்கு அளித்த மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றுகிறது. ஸ்ரீ ராம்லாலாவின் 'பிரான் பிரதிஷ்டா' விழா ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெறும்.
முக்கிய அம்சங்கள்:
இத்திட்டமானது அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்களை அழைத்து செல்லதற்காக சத்தீஸ்கர் அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பயனாளிகள் ஸ்ரீ ராம்லாலா தரிசனத்திற்காக யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சத்தீஸ்கரில் வசிப்பவர்கள் 18-75 வயதுக்குட்பட்டவர்கள், மாவட்ட மருத்துவக் குழுவின் சுகாதாரப் பரிசோதனையில் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் இந்தப் பயணத்திற்குத் தகுதியுடையவர்கள்.
ஊனமுற்ற நபர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு குடும்ப உறுப்பினருடன் தரிசனத்திற்குச் செல்ல முடியும். முதற்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும்.
இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஸ்ரீ ராம்லாலா தரிசனக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுக்கள் விகிதாசார ஒதுக்கீட்டின்படி பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்.
No comments:
Post a Comment