தூய்மையான நகரங்கள் 2023:
தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
1 லட்சத்திற்கு மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்
- முதலிடம் – இந்தூர் (7வது முறை), சூரத் இரு நகரங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது- (இந்தூர் தொடர்ந்து 7-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது)
- மூன்றாமிடம் – நவி மும்பை
- நான்காவது இடம் – விசாகப்பட்டினம்
1 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்
- முதலிடம் – சாஸ்வத் (மகாராஷ்டிரா)
- இரண்டாமிடம் – பதான் (சத்திஸ்கர்)
- மூன்றாமிடம் – லோனா வாலா (மகாராஷ்டிரா)
கங்கை ஆற்றங்கரையோர தூய்மை நகரங்கள்
- முதலிடம் – வாரணாசி
- இரண்டாமிடம் – பிராயாக்ராஜ்
மாநிலங்கள் அடிப்படையில்
- முதலிடம் – மகாராஷ்டிரா
- இரண்டாமிடம் – மத்தியபிரதேசம்
- மூன்றாமிடம் – சத்திஸ்கர்