TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.01.24:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு CEO நியமனம் :
கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமனம் செய்யப்படுவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் செயல்பாடு, பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலர் 13.01.2024 நியிமக்கப்பட்டுள்ளார்
ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் (அயோத்தி தாம்) :
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் (அயோத்தி தாம்) திட்டத்தை தொடங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர் மக்களுக்கு அளித்த மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றுகிறது. ஸ்ரீ ராம்லாலாவின் 'பிரான் பிரதிஷ்டா' விழா ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெறும்.
இத்திட்டமானது அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்களை அழைத்து செல்லதற்காக சத்தீஸ்கர் அரசு தொடங்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள் : ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் (அயோத்தி தாம்)
தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (National Road Safety Week) 2024:
இது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 ஆம் தேதி ஜனவரி 17 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகின்றது.
இது சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் அனுசரிக்கப் படுகின்றது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவானது 35வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
முதன்முதலில் 1989 ஆண்டில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வானது அனுசரிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் 35வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு, "“Be a Road Safety Hero"- “சாலைப் பாதுகாப்பு ஹீரோவாக இருங்கள்” என்பதாகும்.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆணையமானது ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துடன் இணைந்து அனுசரிக்கின்றது.
நேரடி வரி வசூல் 19% அதிகரிப்பு :
நடப்பு நிதியாண்டில் ஜன.10-ஆம் தேதி வரை ரூ.14.70 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19.41 சதவீதம் அதிகம்.
இது தொடா்பாக அந்தத் துறை வெளியிட்ட அறிவிக்கையில்,
‘நடப்பு நிதியாண்டில் ஜன.10-ஆம் தேதி வரை, வரி செலுத்துவோருக்குத் திருப்பி அளிக்கப்பட்ட தொகை (ரீஃபண்ட்) போக ரூ.14.70 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது.
இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19.41 சதவீதம் அதிகம். தற்போது வசூலாகியுள்ள ரூ.14.70 லட்சம் கோடி வரி என்பது நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நேரடி வரி வசூலில் 80.61 சதவீதமாகும். நேரடி வரி வசூலில் பெருநிறுவன வரி, தனிநபா் வருமான வரி ஆகியவையும் அடங்கியுள்ளன.
பெருநிறுவன வருமான வரியின் வளா்ச்சி விகிதம் 8.32 சதவீதமும் தனிநபா் வருமான வரியின் வளா்ச்சி விகிதம் 26.11 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஹிந்துஸ்தானி பாடகி பிரபா ஆத்ரே காலமானார்:
புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர் டாக்டர். பிரபா ஆத்ரே, 92 வயதில் காலமானார்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற கிரானா கரானா இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார்.
பிரபா ஆத்ரே, இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் அறிவியல், சட்டம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்று பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக திகழ்ந்துள்ளார்.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது 2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
13 ஜனவரி - லோஹ்ரி திருவிழா
அறுவடை பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஆண்டின் முதல் திருவிழா லோஹ்ரி ஆகும். இது வட இந்தியாவில், முக்கியமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
லோஹ்ரி பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 அன்று நெருப்பை ஏற்றி அதைச் சுற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. கோதுமை தண்டு, அரிசி, ரேவி, வெல்லம் மற்றும் பாப்கார்ன் ஆகியவை நெருப்பில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: