Sunday, December 17, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.12.2023:


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.12.2023:


ஜன.12-ல் குரூப் 2 தேர்வு முடிவுகள்:

ஜன.12-ல் குரூப் 2 தேர்வு முடிவுகள் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023 ஆம் ஆண்டில் 15.03.2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளயிடப்பட்டது. தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 இலட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர். தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.

மிகவும் பாதுகாப்பான மாநகரம்:

நாட்டில் உள்ள ஆறு மெட்ரோ நகரங்களில், சென்னைதான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குற்றப் பதிவு அமைப்பானது வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டு சென்னை மாநகரில் பெண்களுக்கு எதிராக 736 வழக்குகள் மட்டுமே காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 874 வழக்குகளைக் காட்டிலும் குறைவு. இதில் தாக்குதல், பாலியல் தொல்லை, கடத்தல், வரதட்சிணை, பலாத்காரம், அடித்தல் உள்ளிட்ட புகார்களும் உள்ளடக்கம்.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்:

2023-ல் துவங்கப்பட்ட எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் என்பது பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்க தொடங்கப்பட்ட திட்டமாகும்.

‘விஜய் திவஸ்’:

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் டாக்காவில் இந்திய படைகளிடம் சரணடைந்தனா். இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்தியா விடுதலை பெற்று தந்தது. இந்த நிலையில், போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளையொட்டி, போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சங்கீத கலாநிதி விருது :

97வது மீயூசிக் அகாடமி இசை விழாவில் 2023ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதானது கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்து பத்திரிக்கை குழுமமானது எம்.எஸ்.சுப்புலெட்சுமி அறக்கொடை விருதினை  வழங்கியுள்ளது.

பறக்குடா (Barracuda):

கேரளா, ஆலப்புழாவில் இந்தியாவின் அதிவேக சோலார் மின்சாரப்படகு சேவையானது பறக்குடா (Barracuda) என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது.

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநராக காஞ்சன் தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வகை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது:

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய கணினி அவசரநிலைப் மீட்புக் குழு (சிஇஆர்டி-இன்), ஆண்ட்ராய்டு பதிப்பு 11, 12, 13 மற்றும் 14ஐக் கொண்ட சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த வகை மாடல் செல்போன்களில், பல்வேறு வகையான பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் வந்திருப்பதாகவும், செல்போனில் இருக்கும் பாதுகாப்பு வளையங்களை, ஊடுருவல்காரர்கள் எளிதாகக் கடந்துசெல்ல இந்த வகை மாடல் செல்போன்களில் வசதி இருப்பதாகவும், இதனால், செல்போனில் இருக்கும் மிக முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயமிருப்பதாகவும் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதாகவும் சிஇஆர்டி-இன் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் வளர்ப்பு பட்டியல் 2023:

குழந்தைகள் வளர்ப்பு பட்டியலில் இந்தியா 79வது இடத்தினை பிடித்துள்ளது

  1. முதலிடம் – ஸ்வீடன்
  2. இரண்டாவது இடம் – நார்வே
  3. மூன்றாவது இடம் – பின்லாந்து

குவைத் அமீர் ஷேக் நவாஃப் காலமானார்:

குவைத் மன்னா் ஷேக் நவாஃப் அல் அஹமது அல் சபா  காலமானாா்.அவரது மரணத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.86 வயதாகும் மன்னா் ஷேக் நவாஃப் அல் அஹமது உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பா் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன் பிறகு அவரது உடல்நலம் குறித்த தகவலை குவைத் மக்கள் தொடா்ந்து எதிா்பாா்த்து வந்தனா். மன்னரின் அஹமது மறைவைத் தொடா்ந்து, அவரது சகோதரரும் உலகின் மிக வயதான பட்டத்து இளவரசருமான ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபா் (83) குவைத்தின் அடுத்த மன்னராகிறாா்.

இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு:

இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான விசா தேவைகளை ரத்து செய்ய ஈரான் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் மேலும் 32 நாடுகளுக்கான விசா தேவை ரத்து செய்ய நடைபெற்ற ஈரான் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரானிற்கு அதிகம் பேர் சுற்றுலா வர வேண்டும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியர்களுக்கு விசாவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் இந்தியா வந்தார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இதையடுத்து தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(சனிக்கிழமை) அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சேர்ந்து ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை வரவேற்றனர்.

உக்ரைனுக்கு நிதியுதவி:தடுத்தது ஹங்கேரி:

யூனியன் முடக்கிவைத்துள்ள தங்கள் நாட்டு நிதியை விடுவிக்க வலியுறுத்தி வரும் ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன், அதுவரை உக்ரைனுக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுத்து நிறுத்தவிருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தாா். அதன்படி, உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதியளிப்பதை உறுதி செய்வதற்கான கூட்டத்தை அவா் புறக்கணித்தாா். அதையடுத்து, அந்த நிதியுதவி திட்டம் முடக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் அமைப்பின் 27 உறுப்பு நாடுகளும் சம்மதித்தால்தான் இதுபோன்ற முடிவுகளை அந்த அமைப்பால் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியல் 2023:

இஸ்ரேல் – காசா போர் (War in Israel and Gaza) 2023ஆம் ஆண்டில் கூகுளில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது.

Titanic Submarine, Turkey Earthquake, Hurricane Hilary ஆகியன அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகம்:

உலகின் மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகமானது தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஜின்பிங் மலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக ஆழத்தில் (2400மீ) அமைந்த மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகமாகும்

கண்ணுக்குத் தெரியாத கரும்பொருள் ஆய்வு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிரணி வரலாற்று வெற்றி

நவி மும்பையில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்ஸ் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2வது இன்னிங்ஸில் இந்தியா 186/6க்கு டிக்ளேர் செய்ய இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி சர்மா 4, பூஜா வஸ்த்ரகா் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதன் மூலம் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளார்கள்.

ஜெர்சி எண்-7ஐ ரிட்டையர்டு செய்வதாக பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது:

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பயன்டுத்திய ஜெர்சி எண்-7ஐ ரிட்டையர்டு செய்வதாக பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.

எம்.எஸ்.தோனியை கெளரவிக்க அவர் பயன்டுத்திய ஜெர்சியானது ரிட்டையர்டு செய்யப்பட்டுள்ளது.

வரும்காலத்தில் தோனியின் ஜெர்சி எண் யாருக்கும் வழங்கப்படாது.

சச்சின் டெண்டுல்கருக்கு (ஜெர்சி எண் 10) பிறகு இந்த கெளரவம் அளிக்கப்படும் நபராக தோனி திகழ்கிறார்

இந்திய அணியானது தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் கோப்பை (2013) ஆகியவற்றை வென்றது குறிப்பிடத்தக்கது.

2004-ல் அறிமுகமான தோனி 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் கோப்பை:

பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் கோப்பை போட்டியினை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.

ஐடிஎஃப் உலக சாம்பியன் பட்டம் 2023

ஆடவர் பிரிவில் செர்பியா நாட்டின் நோவக் ஜோ கோவிச், மகளிர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் ஐடிஎஃப் உலக சாம்பியன் பட்டத்திற்கு தேர்வாகியுள்ளனர்.


நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: