TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.12.2023
கரிகால் சோழன் விருது :
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான கரிகால் சோழன் விருதிற்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கும் இவ்விருதினை தஞ்சாவூர் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை இணைந்து வழங்குகின்றன.
2021ஆம் ஆண்டு விருது:
எழுத்தாளர் நூல்
- இளந்தமிழன்(மலேசியா) -இளந்தமிழன் சிறுகதைகள்
- ரமா (சிங்கப்பூர்)-சுரேஷ் அம்பரம்
- சிவ.ஆரூரன் ( இலங்கை)-ஆதுரசாலை
2022ஆம் ஆண்டு விருது
எழுத்தாளர் நூல்
- எம்.கருணாகரன் ( மலேசியா) - உள்ளங்கை கடவுளும் அஜந்தா பேரழகியும்
- பொன் சுந்தர ராஜ் ( சிங்கப்பூர் ) - துமாசிக்
- நோயல் நடேசன் ( இலங்கை) - பண்ணையில் ஒரு மிருகம்
மிக்ஜம் புயல் (Mikjam) :
டிசம்பர் 3-ல் உருவாகும் மிக்ஜம் புயலானது வடதமிழகம், தென் ஆந்திரா இடையே கரையை கடக்க புயலுக்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ளது.
மியானமர் மிக்ஜம் என்ற பெயரை தந்துள்ளது.
விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவு:
கோவாவில் விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவில் திஷா நாயர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.இப்பிரிவில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை திஷா நாயக் பெற்றுள்ளார்
பொருளாதார வளர்ச்சி
2022-2023 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6.2%மாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6%மாக வளர்ச்சியடைந்துள்ளது.தேசிய புள்ளியல் அலுவலகத்தால் (NSO) இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் நிதி பற்றாக்குறையாது அக்டோபர் மாத இறுதியில் ரூ.8.03 லட்சம் கோடியாக இருக்கிறது.
வாழ்க்கை வரலாறு நூல்:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வாழ்க்கை வரலாற்றினை கூறும் Mallikarjun Kharge : Political Engagement With Compassion, Justice and Inclusive Development நூலானது வெளியிடப்பட்டுள்ளது.சுகதேயோ தோரட் மற்றும் சேத்தன் ஷிண்டே ஆகியோர் இந்த நூலின் ஆசிரியர்கள் ஆவார்கள்
போட்டித் தேர்வுகளில் முறைகேடு
ஜார்க்கண்டில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படும் மசோதாவிற்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.மேலும் இச்சட்டத்தின் கீழ் ரூ.10 கோடி அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
மின்சார உற்பத்தி:
உலக அளவிலான மின்சாரம் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
மின்சாரச் சட்டம் 2023, பிரிவு 135-ஆனது மின்சாரத் திருட்டான குற்றத்திற்குரிய தண்டனையாகும்.
மக்கள் மருந்தகம் / Makkal Marunthagam– 10,000வது கிளை:
2015-ல் கொண்டு வரப்பட்ட மக்கள் மருந்தகம் திட்டத்தின் 10,000வது கிளையை ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் திறந்து வைத்துள்ளார்.மேலும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 25,000-ஆக உயர்த்துகின்ற திட்டத்தினையும் துவங்கி வைத்துள்ளார்.02.11.2016-ல் தமிழ்நாட்டில் முதல் மக்கள் மருந்தக கிளையானது கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானமான ட்ரோன்கள் வழங்குகின்ற திட்டம் துவக்கம் :
டிசம்பர் 30-ல் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ஆளில்லா விமானமான ட்ரோன்கள் வழங்குகின்ற திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.
உலக பருவநிலை மாநாடு: World Climate Conference
டிசம்பர் 1-ல் துபாயில் நடைபெறும் உலக பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயு உமிழ்தலை குறைத்தல், கடுமையான பருவநிலை மாற்ற பாதுகாப்புகளை எதிர்கொள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
ஜி-20 பிரேசில் தலைமை:
ஜி-20 கூட்டமைப்பிற்கான இந்தியாவின் ஓராண்டு தலைமை பொறுப்பானது 30.11.2023-உடன் முடிவடைந்துள்ளது
ஜி-20 கூட்டமைப்பிற்கான தலைமை பொறுப்பினை பிரேசில் நாடானது ஏற்றுக் கொண்டுள்ளது.
விமான பயன்பாடு நிறுத்தி வைப்பு
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆஸ்ப்ரே ரக விமானத்தில் சென்ற 8 பேர் ஜப்பான் கடல் பகுதியில் விமானத்துடன் கடலில் விழுந்து இறந்துள்ளன.
இதனால் ஜப்பான் அரசானது ஆஸ்ப்ரே ரக விமானங்களை இயக்க ஜப்பான் தடை விதித்துள்ளது.
விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment