TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.10.2023:
இந்திய ரயில்வேயின் பிரத்யேக சரக்குப் பாதை -டெடிகேடட் பிரைட் காரிடர் - டிஎஃப்சி) திட்டம்:
இந்தத் திட்டத்தின் கீழ் சரக்கு ரயில்கள் மட்டுமே செல்ல தனி இருப்புப் பாதை அமைக்கப்படும். வடக்கை கிழக்கு மேற்கோடு இணைக்க ரூ.1.2 லட்சம் கோடி செலவில், 7 மாநிலங்கள், 77 மாவட்டங்களை இணைக்கும் மாபெரும் திட்டம் இது. இதுவரை அதிக வேகமின்றி சென்றுகொண்டிருக்கும் சரக்கு ரயிலின் சராசரி வேகம், இனி அதிவிரைவு பயணிகள் ரயிலுக்கு இணையாக அதிகரிக்க இருக்கிறது.
KEY POINTS :இந்திய ரயில்வேயின் பிரத்யேக சரக்குப் பாதை திட்டம்:
கொள்கலன் முனையத் திட்டத்தை இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்:
தூத்துக்குடியில் அமைந்துள்ள வ .உ .சி துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையத் திட்டத்தை இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார். 2 மெகாவாட் (MW) காற்றாலை மற்றும் 5 மெகாவாட் சூரிய ஒளி ஆலை அமைக்கப்பட்டுள்ளன. இந்த முன் முயற்சிகளின் விளைவாக இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக வ .உ .சி துறைமுகம் அறிவிக்கப்பட்டது. பசுமை ஹைட்ரஜன் மையம் மற்றும் கடல் காற்றாலை எரிசக்தி மையம் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 12 நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
ஆந்திர ரயில் விபத்து :
விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் 29.10.2023 விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியதில் சில பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் முதலில் 8 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.
தேவர் ஜெயந்தி
அக்டேபார் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் மரியாதை செலுத்த ரூ.1.55 செலவில் 2 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மெய்புலம்
தமிழக அரசானது வனவிலங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மெய்புலம் என்ற திட்டத்தினை தொடங்கப்பட்டுள்ளது.
TATO-App
தமிழ்நாட்டில் ஆட்டோ சவாரிக்காக தமிழக அரசானது TATO – App-னை உருவாக்கியுள்ளது.
இந்தியா-கஜகஸ்தான்
காஜிண்ட் (Kazint) என்னும் கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றது.
காஜிண்ட்-2023′ கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 120 பேர் கொண்ட இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக் குழு கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றது. கஜகஸ்தானின் ஓட்டார் நகரில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.இந்தியா- கஜகஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி 2016-ஆம் ஆண்டு ‘பிரபால் டோஸ்டைக்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பிறகு இது நிறுவன அளவிலாக மேம்படுத்தப்பட்டு ,’காஜிண்ட் பயிற்சி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது
டபிள்யூடிஏ எலைட் கோப்பை மகளிா் டென்னிஸ்:
சீனாவில் நடைபெற்ற டபிள்யூடிஏ எலைட் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில் பிரேஸிலின் பியாட்ரிஸ் ஹட்டாட் மாயா சாம்பியன் பட்டம் வென்றாா்.
இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அவா் 7-6 (13/11), 7-6 (7/4) என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த கின்வென் ஜெங்கை வீழ்த்தினாா். இதன் மூலம் மாயா தனது 3-ஆவது டபிள்யூடிஏ பட்டத்தை வென்றிருக்கிறாா்.
2 மணி நேரம் 51 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டம், நடப்பாண்டு டபிள்யூடிஏ டூா் போட்டிகளில், நோ் செட்கள் கொண்ட மிக நீண்ட நேர இறுதி ஆட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 250 புள்ளிகளுக்கு மேல் கொண்ட போட்டியிலும், ஹாா்டு கோா்ட் போட்டியிலும் மாயா கோப்பை வென்றது இதுவே முதல் முறையாகும்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் :
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் தங்கமும், மற்றொரு தமிழக வீரரான துளசிமணி பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.
ஆசியா பாரா விளையாட்டில் உலக சாதனையான முறியடித்து தங்கப் பதக்கம்
ஈட்டி எறிதலில் பாராலிம்பிக் சாம்பியனான சுமித் ஆன்டில் , 2022 ஆசியா பாரா விளையாட்டில் F 64 பிரிவில் 73.29 மீட்டர் தூரம் எறிந்து தனது முந்தைய உலக சாதனையான 70.83 மீட்டர்களை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார். சுமித் ஆண்டிலின் 73.29 மீ எறிதல் அவருக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது மட்டுமல்லாமல் அவரது திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியது. அவர் 2021 ஆம் ஆண்டில் கேல் ரத்னா விருதையும் 2022 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் வழங்கப்பட்டது .
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022:
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 2022- இந்திய வீரர்கள் 111 பதக்கங்களை (29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம்) வென்று வரலாறு படைத்துள்ளனர். இந்திய பாரா தடகள வீரர்கள் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற 107 என்ற சாதனையை விட நான்கு பதக்கங்கள் அதிகமாக வென்றனர்.
2022 ஆசிய பாரா விளையாட்டுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
முதல் நான்கு இடங்கள்:
- சீனா 521 பதக்கங்கள் (214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம்)
- ஈரான் 131 பதக்கங்கள் (44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம்)
- ஜப்பான் 150 பதக்கங்கள் (42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம்) வென்றன.
- தென் கொரியா 103 பதக்கங்கள் (30 தங்கம், 33 வெள்ளி மற்றும் 40 வெண்கலம்).
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 30
30th October உலக சிக்கன நாள் / உலக சேமிப்பு தினம் :உலக சிக்கன தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . உலக சிக்கன நாள், பெரும்பாலும் உலக சேமிப்பு தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா இதை ஒரு நாள் முன்னதாகவே செய்கிறது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 அன்று குறிக்கப்படுகிறது . வீட்டில் பணத்தைப் பூட்டி வைப்பதற்குப் பதிலாக வங்கியில் (நாட்டில் பண விநியோகத்தை வளப்படுத்துவதற்காக) பணத்தைச் சேமிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது. கருப்பொருள்: “Savings Prepare You for a Better Future”
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
No comments:
Post a Comment