TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.10.2023 :
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை :
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய 18 செ.மீ., மழையில் 73% குறைவாக அதாவது 5 செ.மீ., மட்டும் பெய்துள்ளது. கன்னியாகுமரியில் இயல்பான அளவான 19 செ.மீட்டரை விட 151% அதிகமாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
“பாரத் டெக்ஸ் 2024” :
“பாரத் டெக்ஸ் 2024” 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் 29 வரை புதுடெல்லியில் நடைபெற உள்ளது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்களைக் கொண்ட இது உலக அளவில் மிகப்பெரிய ஜவுளி நிகழ்வாக இருக்கும்
பாரத் டெக்ஸ் 2024 இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜவுளி பாரம்பரியங்கள் முதல் சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரை முழு ஜவுளி தொழில் மதிப்பு சங்கிலியின் விரிவான காட்சியாக இருக்கும்.
40 நாடுகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன், இந்த நிகழ்வில் அறிவுசார் அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் ஆகியவை நடைபெற உள்ளன.
மருதுசகோதர்கள் சிலை திறப்பு :
மருதுசகோதர்கள் நினைவு தினமான அக்டோபர் 24-ல் சென்னையில் மருதுசகோதர்கள் சிலையை (Maruthu Brothers Statue) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மருது சகோதர்களால் 1801 திருச்சிராப்பள்ளி பிரகனடமானது வெளியிடப்பட்டது.
இவர்கள் இருவரும் 1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ல் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
பாதுகாப்பன நகரங்கள் பட்டியல் :
செர்பியாவிலுள்ள நம்பியோ தனியார் நிறுவனமானது வெளியிட்டுள்ள பாதுகாப்பு நகரங்கள் பட்டியிலில் இந்திய அளவில் சென்னை நகரமானது முதலிடத்தையும்,உலகளவில் 127வது இடத்தினையும் பிடித்துள்ளது.
இந்திய ராணுவ பாரம்பரிய விழா :
இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் முதல் பதிப்பை புதுடெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சகம் நடத்தியது . இதில் உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான ராணுவ கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை இந்த திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய இராணுவ கலாச்சாரம், மரபுகள் மற்றும் வரலாறு பற்றிய ஆய்வுக்கு ஒரு புதிய உந்துதலை அளிப்பதையும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிகளுக்கு உறுதியான மதிப்பை சேர்ப்பதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு, மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான இந்தியா மற்றும் உலகம் தொடர்பான பல்வேறு சமகால பிரச்சினைகளை விவாதிப்பதற்கான தளத்தையும் இது வழங்குகிறது.
திரவ நானோ DAP :
குஜராத் மாநிலம் காந்திநகரில் திரவ நானோ DAP ஆலையானது திறக்கபட்டுள்ளது.
இந்தியாவின் முதல் திரவ நானோ DAP ஆலையாகும்.
DAP – Di Ammonium Phosphate
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் தினம் :
1962 ஆம் ஆண்டில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) நிறுவப்பட்ட தன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் தினம் அனுசரிக்கப்படுகிறது .
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) இந்திய-சீனப் போருக்குப் பிறகு அக்டோபர் 24, 1962 அன்று எழுப்பப்பட்டது. இந்தப் போர் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பின் பலவீனங்களையும், இமயமலையில் இந்தியா-சீனா எல்லையைக் காக்க ஒரு சிறப்புப் படையின் அவசியத்தையும் உறுதிப்படுத்தியது இதன் மூலம் . CRPF சட்டம் 1949ன் கீழ், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை உருவாக்கப்பட்டது
நந்த கெளரா யோஜனா போர்டல் :
உத்திரகாண்ட் மாநிலத்தின் முதல்வரான புஷ்கர் சிங் தாமி பெண் குழந்தைகளுக்கான நந்த கெளரா யோஜனா போர்டல் (Nanda Gora Yojana Portal)-ஐ துவங்கி வைத்துள்ளார்.
நம்ம ஒடிசா, புதிய ஒடிசா :
நம்ம ஒடிசா, புதிய ஒடிசா திட்டத் தலைவராக தமிழகத்தினை சேர்ந்த ஐ.ஏ.எஸ் பணியில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனை ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் நியமித்துள்ளார்.
இப்பதவியானது கேபினட் அமைச்சருக்கு இணையானதாகும்.
வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலராக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 27
25th October சர்வேதேச கலைஞர்கள் தினம் (International Artist Day) :அக்டோபர் 25 இன்று சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவகலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான கிறிஸ் மேக்ளூர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ந்தேதி சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.ரது பிறந்தநாளான அக்டோபர் 25ல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்