TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.10.2023
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை :
இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு விசா தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்த திட்டத்தை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், இந்த ஏழு நாடுகளுக்கும் நிரந்தரமாக விசா தேவையில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கவுள்ளது. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் பெண் டி.ஜி :
இந்திய ஆயுதப்படை மருத்துவமனையின் முதல் பெண் டி.ஜி.யாக சதனா சக்சேனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது :
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய் சந்திரசூட்டிற்கு ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் இந்தியாவின் 50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்
வளர்ந்த பாரதம் உறுதிமொழி பயணம் :
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றைடைய வளர்ந்த பாரதம் உறுதிமொழி பயணம் (விகசித் பாரத் சங்கல்ப யாத்ரா) என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஹரிமெள சக்தி பயிற்சி 2023 (Harimau Shakti) :
இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையே ஹரிமெள சக்தி பயிற்சி 2023 (Harimau Shakti) என்னும் கூட்டு ராணுவப்பயிற்சியானது நடைபெற்றுள்ளது.
சிறந்த பசுமை இராணுவ நிலையம் :
ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் இராணுவ நிலையமானது சிறந்த பசுமை இராணுவ நிலையமாக தேர்வாகியுள்ளது.
அன்னை தெராசா விருது-2023 :
அமைதிக்கான நோபல் பரிசு 2023-ஐ பெற்ற நர்கீஸ் முகமதிக்கு (Narges Mohammadi) சமூக நீதிக்கான 2023-ஆம் ஆண்டிற்கான அன்னை தெராசா விருது வழங்ப்பட்டுள்ளது
மின்காந்த ரயில் துப்பாக்கி :
உலகிலேயே முதல் மின்காந்த ரயில் துப்பாக்கிகளை ஜப்பான் இயக்கியுள்ளது.இந்த துப்பாக்கிகள கடலோர கப்பலில் இருந்து ஜப்பான் இயக்கியுள்ளது.
ஆசிய பாரா ஒலிம்பிக்:2023
இதில், இன்று நடைபெற்ற (டி-20 பிரிவு) 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜீவன்ஜி தீப்தி கலந்துகொண்டார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 56.69 நொடிகளில் கடந்து தீப்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஆசிய அளவில் இது சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், பெண்களுக்கான (டி-12 பிரிவு) 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
படகுப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டில் ஆண்களுக்கான படகுப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுரவ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோன்று விஎல்2 பிரிவில் நடைபெற்ற படகுப்போட்டிகளில் இந்தியாவின் கஜேந்திர சிங் வெண்கலம் வென்றார்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என 24 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 24
24th October ஐ.நா. தினம் : 1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
24th October உலக வளர்ச்சி தகவல் தினம் : உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலகத் தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ . நா . சபை முடிவு செய்தது . 1972 ஆம் ஆண்டு உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24 ஐ ஐ . நா . சபை அறிவித்தது . 1973 ஆம் ஆண்டு இத்தினம் கொண்டாடப்படுகிறது . தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ . நா . சபை கூறுகிறது .1972 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகளின் தினத்துடன் இணைந்து உலக வளர்ச்சித் தகவல் தினத்தை நிறுவ முடிவு செய்தது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சிப் பிரச்சனைகள் மற்றும் சர்வதேசத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தை பொதுச் சபை கொண்டிருந்தது.
24th October சர்வதேச தூதரக தினம்
24th October உலக போலியோ தினம் :உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, நோய், வறுமையை ஒழிப்பது உட்பட பல பணிகளில் ஐ.நா., சபை செயல்படுகிறது. இது 1945 அக். 24ல் உருவாக்கப்பட்டது. இதை அங்கீகரிக்கும் விதமாக அக்., 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக். 24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் 'போலியோமியெலிட்டிஸ்' சுருக்கமே 'போலியோ'.உலக போலியோ தினம் 1985 ஆம் ஆண்டில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தால், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய குழுவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சியாளரான ஜோனஸ் சால்கின் பிறந்த நாளை நினைவுகூருவதற்காக நிறுவப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த போலியோ வைரஸ் தடுப்பூசியை அவர் உருவாக்கியுள்ளார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்