TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.10.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.10.2023 

ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு:

2025ல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை (அக். 21) காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. டிவி - டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை விண்கலத்தை அனுப்பி மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையும் படிக்க | விண்ணில் பாய்ந்தது ககன்யான் சோதனை விண்கலம்! சரியாக 16.6 கிமீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி தனியாகப் பிரிந்த பின்னர், பாராசூட் மூலமாக விண்கலம் மட்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் வங்கக்கடலில் இறக்கப்பட்டது. தொடர்ந்து, கடலிலிருந்து கலன் மீட்கப்படும்.

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சக்ரா-2 :

சிபிஐ அதிகாரிகளால் இணைய வழி நிதி மேசடி வழக்குகள் தொடர்பான 76 இடங்களில் சோதனையை தொடங்கியுள்ளன.

இதற்கு ஆபரேஷன் சக்ரா-2 என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிபிஐ அதிகாரிகள் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து 115 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-1 என்ற பெயரில் சோதனை நடத்தியுள்ளன.

நவ.1ஆம் தேதி - கிராம சபைக்கூட்டம் :

நவ.1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் நவம்பர் 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்றி முறையை பின்பற்றி உள்ளாட்சிகள் தினத்தன்று வரும் நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும்.

தமிழ்நாடு அறிவுசார் நகரம்

ரூ.200 கோடி செலவில் 1703 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளூவர் மாவட்டத்தின், பெரியபாளையம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாட்டின் அறிவுசார் நகரம் அமைய உள்ளது.

திருப்தி திட்டத்தினை :

அக்டோபர் 17-ல் அனுசரிக்கப்பட்ட உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திருப்தி திட்டத்தினை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் இருப்போருக்கு மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு :

உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) குஜராத் மாவட்டத்தின் தோர்தா கிராமமானது சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரு புயல்கள் :

தேஜ் என்ற பெயரினை அரபிக்கடலில் உருவான புயலுக்கு இந்தியா பரிந்துரை செய்துள்ளது.

தேஜ் என்பதன் பொருள் வேகம் என்பதாகும்.

ஈரான் நாடானது வங்கக்கடலில் உருவான புயலக்கு ஹாமூன் என்ற பெயரினை பரிந்துரை செய்துள்ளது.

டிஜிட்டல் டாக்டர் கிளினிக் (Digital Doctor Clinic) :

உத்திரபிரதேச மாநிலத்தின் கிராமங்களில் தொலை நிலை மருத்துவ ஆலோசனை மையங்கங்களான டிஜிட்டல் டாக்டர் கிளினிக் (Digital Doctor Clinic) ஒபுது குழும மருத்துவமனையுடன் உத்திரபிரதேச அரசு ரூ.1,000 கோடி செலவில்  ஒப்பந்தம் செய்துள்ளது

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 21

21st October தேசிய காவல்துறை நினைவு தினம் (National Police Commemoration Day):ஆண்டுதோறும் அக்டோபர் 21-ல் 1959-ஆம் ஆண்டு லடாக்கில் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்ட காவல் துறையினரின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!