TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.10.2023:
2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு:
அமெரிக்காவின் பியரே அகோஸ்தினி, ஜெர்மனியின் பெரென்க் க்ரவுஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக வழங்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் குறித்து இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம்:
இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் குறித்து போர்ப்ஸ் நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 9,45,489 வருவாய் ஈட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில வாரியான மக்களின் ஆண்டு சராசரி வருவாய் பட்டியலில் ரூ.20,720 தொகையுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம் ரூ.19,600 பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
நகரங்களின் பட்டியலில் சோலாப்பூர், மும்பை, பெங்களூர், தில்லி, புவனேஷ்வர், ஜோத்பூர், புணே, ஸ்ரீநகர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ளன. சென்னை இதில் இடம்பெறவில்லை.
இந்திய ஆண்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.19,53,055 ஆகவும் பெண்களின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.15,16,296 ஆகவும் இருக்கிறது. மேலும், சம்பளங்களில் பெரிய பங்களிப்பை செலுத்தி இந்தியாவில் ஐ.டி. துறையே முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண்மணி
குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், புகழ்பெற்ற எழுத்தாளரும், பரோபகாரருமான சுதா மூர்த்தி, கனடா இந்தியா அறக்கட்டளையின் குளோபல் இந்தியன் விருதைப் பெற்றுள்ளார்.
குளோபல் இந்தியன் விருது, $50,000 மதிப்பிலானது, அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது.
உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் இந்தியா 47-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பதாக இணைய வேக பரிசோதனை தளமான ‘ஓக்லா’ தெரிவித்துள்ளது:
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏா்டெல் நிறுவனங்களால் 5ஜி இணையசேவை அறிமுகப்படுத்தப்பட்டன. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் விநாடிக்கு 13.87 எம்.பி.யாக ஆக இருந்த சராசரி பதிவிறக்க வேகம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் விநாடிக்கு 50.21 எம்.பி.யாக உயா்ந்துள்ளது. இதன்மூலம், உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் (ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ்) 119-ஆவது இடத்திலிருந்த இந்தியா 72 இடங்கள் முன்னேறி 47-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
பிகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு:
பிகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதில்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாநில மக்கள் தொகையில் 63 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
பிகார் மாநில வளர்ச்சித் துறை ஆணையர் விவேக் சிங் வெளியிட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு அறிக்கையில்,
- மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இபிசி) 36%,
- இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 27.13% உள்ளனர்.
- பட்டியலின மக்கள் (எஸ்.சி) 19.65%,
- பழங்குடியின மக்கள் (எஸ்.டி.) 1.68% உள்ளனர்.
- மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 81.99%,
- முஸ்லிம் மக்கள் தொகை 17.70% உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்