TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.10.2023 :
இரட்டையர் பிரிவில் முதல்முறையாக இந்தியா பதக்கம்:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல்முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணை, கொரிய குடியரசு இணையை தோற்கடித்து வெண்கலம் வென்றுள்ளது.
பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை:
ஆசிய விளையாட்டுப் போட்டி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலமாக கேரளத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.
1984 ஒலிம்பிக் தொடரில் 55.42 வினாடிகளில் பி.டி. உஷா இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பொருந்தாது:
தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம் மீறியதாக, அதன் சிறுபான்மை உரிமையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (அக். 2) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தின்படி கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர் அந்தஸ்து குறித்து முடிவெடுக்க அந்த அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், மாநில அரசு தலையிட முடியாது எனக்கூறி அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டது.
14 நிமிடங்களில் தூய்மை பணி:
இந்தியன் ரயில்வே அமைச்சகமானது ஜப்பானில் புல்லட் ரயில்களை 7 நிமிடத்தில் தூய்மை செய்யும் திட்டத்தினை முன்னோடியாக கொண்டு வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடத்தில் தூய்மை செய்யும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
தூய்மையே சேவை: அக்டோபர் 1-ல் தூய்மையே சேவை நிகழ்வானது தூய்மை இந்தியா திட்டத்தினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முமுவதும் 9.2 லட்சம் இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு:
கரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த 2 மருத்துவர்கள், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகிய மருத்துவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன், அடிப்படை மூலக்கூறு மாற்றியமைக்கப்பட்ட எம்ஆர்என்ஏ, எதிர்வினைகளை செயல்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் செல்களுக்கு எம்ஆர்ஏன்ஏ வழங்கப்படும் போது புரத உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம்தான், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
தேசிய மஞ்சள் வாரியம்:
தெங்கானாவில் நடைபெற்ற ரூ.13,500 கோடி திட்டங்கள் தொடக்க விழாவில் தேசிய மஞ்சள் வாரியமானது தெலுங்கானாவில் அமைக்கப்பட உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
மஞ்சளின் முக்கியத்துவம்: மஞ்சள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நுகா்வில் முக்கிய நாடாக இந்தியா விளங்குகிறது. தெலங்கானாவில் உள்ள விவசாயிகள் பெருமளவில் மஞ்சள் உற்பத்தி செய்கின்றனா். கரோனா தொற்றுக்குப் பிறகு மஞ்சளின் பலன்கள் குறித்த விழிப்புணா்வு அதிகரித்திருக்கிறது. உலக அளவில் அதன் தேவையும் உயா்ந்துள்ளது. எனவே, மஞ்சளின் உற்பத்தி முதல் ஏற்றுமதி-ஆராய்ச்சி வரை ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலிக்கும் தொழில்முறை ரீதியில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில், மஞ்சள் விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிா்கால வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, அவா்களின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் தெலுங்கானாவின் மொலுகு மாவட்டத்தில் ரூ.900 கோடியில் சம்மக்கா-சாரக்கா பெயரில் மத்திய பல்கலைக்கழகமும், ஹஸ்மகொண்டாவில் ஜவுளி பூங்காவானது அமைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வசூல்:தமிழகத்தில் 21% அதிகரிப்பு
2022 செப்டம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரியை விட 10% அதிகமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியானது (GST) 1.62 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
செப்டம்பா் வருவாய் நிலவரம்: மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,62,712 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான ரூ.41,145 கோடி உள்பட), செஸ் வரி ரூ.11,613 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான ரூ.881 கோடி உள்பட) ஆகும்.
தமிழகத்தில் 21% அதிகரிப்பு: தமிழகத்தில் கடந்த 2022, செப்டம்பரில் ரூ.8,637 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது ரூ.10,481 கோடி வசூலாகியுள்ளது. இது 21 சதவீத அதிகரிப்பாகும்.
நேரடி வரிகள் வாரியத் தலைவர் பதவி:
நிதின் குப்தா வகித்து வந்து நேரடி வரிகள் வாரியத் தலைவர் பதவிக்காலமானது 9 மாதம் நீட்டிக்கப்பட்டது.
பிரசாந்த் ஹெலிகாப்டர்:
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவை ஒட்டிய இந்திய எல்லையில் நிலைநிறுத்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 156 இலகு ரக பிரசாந்த் ஹெலிக்காப்டர் வாங்க திட்டமிட்டுள்ளது.
மழைப்பொழிவு :
2023-ல் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்த தென்மேற்கு பருவ மழையானது 94.4% பெய்துள்ளது.
நீண்ட கால மழைப்பொழிவு சராசரியான 868.6 மி.மீ விட குறைவாக 820 மி.மீ அளவிற்கு பெய்துள்ளது.
சங்கல்ப் சப்தா:
அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9 வரை சங்கல்ப் சப்தா (Sankalp Saptaah) எனும் பெயரில் ஒரு வார கால பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.
2023 ஜனவரியில் லட்சிய வட்டாரங்கள் திட்டமானது நாட்டிலுள்ள 329 மாவட்டங்களில் உள்ள 500 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்ட லட்சிய வட்டாரங்கள் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நடைபெற உள்ளது.
ஜம்மு-காஷ்மீா்: சுற்றுலா தலமாக மாறும் உலகின் உயரமான ரயில் பாலம்:
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான ரயில் பாலத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் காத்ரா-பனிஹால் இடையிலான 111 கி.மீ. தொலைவு ரயில் வழித்தடத்தில் சேனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டு வரும் 1.3 கி.மீ. நீள ரயில் பாலம் உலகின் உயரமான ரயில் பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
காந்தியடிகள் காவலர் விருது:
2024 ஜனவரி 26-ல் தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவலர் பிரிவுகள்
1. கோ.சசாங்சாய் -விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்
2. ப.காசிவிஸ்வநாதன் - சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்
3. கா.மு.முனியசாமி - ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்
4. அ.பாண்டியன் - மதுரை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்
5. ஜெ.ரங்கநாதன்- ராணிப்பேட்டை காவல் நிலைய தலமைக் காவலர்
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்