Wednesday, August 30, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.08.2023

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 30.08.2023:

  1. நிலவில் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் இருப்பதை ரோவர் விண்கலம் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, சல்ஃபர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீசு உள்ளிட்டவை இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி மூலம் ரோவர் நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.-CHANDRAYAAN 3 MISSION DETAILS IN TAMIL 
  2. கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் 'குடும்பலட்சுமி' திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் ராகுல் காந்தி இன்று(30.08.23) தொடக்கிவைத்தார். இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. கனடாவின் வான்கூவரில் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியின் 7வது கூட்டமைப்பு (Global Environment Facility) நடைபெற்றுள்ளது.
  4. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து கோடிக்கான ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா, சமீபத்தில் மையோசைட்டிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உடலின் நோய் எதிா்ப்பாற்றலே தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சிதைக்கும் நோய்தான் மையோசைட்டிஸ். இந்த நோய் சமந்தாவை பாதித்த பிறகு தான் பலருக்கு பரிச்சயமானது.இந்த நிலையில், மையோசைட்டிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மையோசைட்டிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், மையோசைட்டிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மையோசைட்டிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
  5. இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள எக்ஸட்ரா தேஜ் (Extra Tej) சிலண்டரின் விளம்பர தூதராக சஞ்சீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. இந்தியாவில் டொயட்டோ நிறுவனமானது 100% எத்தனால் இயங்கும் உலகின் முதல் காரான இன்னோவா ஹைக்ராஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.
  7. முதல் கர்நாடகா கலாச்சார விழாவானது இலங்கையில் நடைபெகிறது.
  8. ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் மங்காக்வா (Emmerson Mnangagwa) தேர்வாகியுள்ளார்
  9. அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  10. வெள்ளி கோளை பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள சுக்ரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

ஆகஸ்ட் 2023 தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்:

30th August:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: