TODAY CURRENT AFFAIRS IN TAMIL 31.08.2023
- உலகில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் ஒரு ஊசி மருந்தை இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஊசி மருந்தை உடலுக்குள் செலுத்திய 7 நிமிடத்தில் இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்றும் இது சிகிச்சைக்கான நேரத்தை முக்கால்வாசி வரை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடிஸோலிசூமாப் எனப்படும் இந்த ஊசி மருந்து நோயாளிகளுக்கு நரம்பு வழியாக நேரடியாக செலுத்திய 7 நிமிடத்தில் மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று இந்த மருந்தை கண்டுபிடித்த இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை எனப்படும் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் முதல் உலகளாவிய UPS தொழில் நுட்பமானது சென்னை, போரூரில் தொடங்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17-வது மக்களவையின் 13-வது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261- வது அமர்வு) செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும்-நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்-31 மசோதாக்கள்
- சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் மொழி குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் இளையோர் இலக்கிய பாசறைத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- தில்லி மெட்ரோ ரயிலில் கடந்த 29.08.23 ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது. கரோனா காலத்துக்கு முன்பும், பின்பும் இதுவரை ஒரே நாளில் 68.1 லட்சம் பேர் பயணித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதையும் தாண்டி கடந்த செவ்வாயன்று 69.9 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது.
- ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இந்தியா, அமெரிக்கா கடற்படைகள் பங்கேற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி நிறைவடைந்துள்ளது இப்பயிற்சியானது இந்திய – பசுபிக் பெருங்கடலில் கடல் சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நடைபெற்றுள்ளது
- மீனவர்கள் மீன்கள் இருக்கும் இடத்தையும், வானிலை அறியவும், ஆபத்து நேரங்களில் உதவும் செயலியான நப்மித்ராவை (Nabhmitra) ISRO கண்டுபிடித்துள்ளது.
- IMF வெளியிட்டுள்ள G20 நாடுகளில் மிகக்குறைந்த GDP தனிநபர் வருமானம் கொண்ட நாடு பட்டியலில் இந்தியா கடைசியிடமான 20வது இடத்தை பிடித்துள்ளது.
- கியாஸ் சிலிண்டர் விலையானது ஒன்றிற்கு ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் சிலிண்டர் மானியமானது ரூ.200 கூடுதலாக வழங்கப்பட உள்ளது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டமான உஜ்வாலா திட்டம் 2016-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
- சிறிய நீர் பாசன திட்டங்கள் 6வது கணக்கெடுப்பில் உத்திரப்பிரதேசமானது 39.76லட்சம் சிறிய நீர் பாசன திட்டங்களோடு முதலிடம் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.-சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்த 6-வது கணக்கெடுப்பு குறித்த அறிக்கை
- புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17ஏ) திட்டத்தின் கீழ் கட்டப்படுள்ள 7வது போர்கப்பலான ஐஎன்எஸ் மகேந்திரகிரியானது நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது இக்கப்பலானது மும்பையின் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படுள்ளது.
- ஜம்மு காஷ்மீரின் டோடோ மாவட்டத்தின் பதர்வா ராஜ்மாஷ் என்னும் சிவப்பு பீன்ஸ்ஸிற்கும், ரம்பன் மாவட்டத்தின் கலாய் தேன் என்னும் காட்டு துளசிக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023
- பிபா கால்பந்து சம்மேளனமானது (FIFA) இலங்கை கால்பந்து அணி மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 342 ரன்கள் குவிக்க, நேபாளம் அணி 23.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 151 ரன்களும், இஃப்திகர் அகமது 109 ரன்களும் குவித்தனர். இந்த நிலையில், ஆசியக் கோப்பை வரலாற்றில் 150 ரன்களை கடந்த முதல் கேட்பன் என்ற சாதனையை ஆஸம் படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 2023 தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்:
No comments:
Post a Comment