TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.08.2023
- முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதையொட்டி தேசிய நல்லாசிரியா் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நிகழாண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. நிகழாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியா் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.மாலதி ஆகிய இருவரும் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
- மத்திய நேரடி வரிகள் வாரிய (CBDT) தலைவரான நிதின் குப்தா பயனாளர்கள் எளிதாக கையாளும் வகையில் கூடுதல் வசிதிகளுடன் புதுபிக்கப்பட்ட வருமான வரி வலைதளமான www.incometaxindia.gov.in புதிய வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளார்.
- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்றது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில்(ICC Men's ODI Team) மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது பாகிஸ்தான் அணி.
- சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது குறித்த தகவலை லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் இறங்கிய லேண்டரில் சென்ற ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) கருவி வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையைின் சுயவிவரங்களை ஆய்வு செய்கிறது. நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் 10 செ.மீ ஆழம் வரை ஊடுருவி ஆராயக்கூடிய திறன் கொண்டது. வெப்பநிலை பரிசோதனை கருவியில் உள்ள 10 சென்சார் கருவிகள் வெப்பநிலையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவின் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஒரே நேரத்தில் இரு புயல்கள் இணைந்து வந்தால் அதை கணிப்பதில் பெரும் சவால்கள் இருந்து வருகின்றன.இதற்குத் தீா்வைத் தரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை சென்னை, ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளா்கள் தற்போது உருவாக்கியுள்ளனா் -‘புஜிவாரா தொடா்பு’
- சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 40 சதவீதத்துக்கும் அதிகமாக மாற்றுத்திறன் கொண்டவா்கள் தபால் வாக்குகள் மூலம் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.
- புழுங்கல் அரிசி ஏற்றுமதி மீது 20 சதவீத வரி விதிப்பு : நாட்டில் உணவுப் பொருள்களின் விலைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. சில்லறை பணவீக்கம், கடந்த ஜூன் மாதம் 4.87 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவாக 7.44 சதவீதமாக அதிகரித்தது. இதையடுத்து, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி அண்மையில் விதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் புழுங்கல் அரிசியின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் போதிய அளவு இருப்பை உறுதிசெய்யவும் அதன் ஏற்றுமதி மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபா் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வணிக ஒத்துழைப்பு: மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு விருது: மேற்கு வங்கத்தில் லாரிகளுக்கு இணையவழி மூலம் அனுமதி வழங்கி பல்வேறு சாவடிகளில் விரைந்து செல்ல உதவும் மாநில அரசின் சுவிதா வாகன உதவி திட்டத்துக்கு மத்திய அரசு தங்க விருதை வழங்கியுள்ளது. இந்திய நிலம் துறைமுக ஆணையம், இந்திய சுங்கத் துறை, எல்லைப் பாதுகாப்பு படை ஆகியவற்றுடன் மேற்கு வங்க அரசு இணைந்து சுவிதா வாகன உதவி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது சரக்கு லாரிகள் பல்வேறு சாவடிகளில் பெற வேண்டிய அனுமதியை எளிமையாக்கி, எல்லைகளை கடப்பதற்கும், துறைமுகங்களுக்கு சென்றடையவும் வேகப்படுத்தி உள்ளது.
- பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை 24ஆம் தேதி முதல் கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு செய்து வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. அதையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
- 200 மீ.: நோவா லைல்ஸ் உலக சாம்பியன் : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா் 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.200 மீ ஓட்டம் இறுதிச் சுற்றில் 19.52 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்துடன் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா்.
- பாா்வையற்றோா் கிரிக்கெட்: இந்தியாவுக்கு தங்கம்: சா்வதேச பாா்வையற்றோா் விளையாட்டு கூட்டமைப்பு (இப்ஸா) உலகப் போட்டிகளில் மகளிா் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்றது. ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஆஸ்திரேலியா 114/8 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி இலக்கு மாற்றப்பட்ட நிலையில், 3.3 ஓவா்களில் 42 ரன்களை விளாசி வென்று தங்கத்தையும் வசப்படுத்தியது.
No comments:
Post a Comment