TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28.08.2023
- சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ரிலையன்ஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் இன்று (ஆக. 28) நடைபெற்றது. இதில்,ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகேஷ் அம்பானி நீட்டிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடைல் தலைவராகவும் ஆனந்த் அம்பானி டிஜிட்டல் மற்றும் எனர்ஜி பிரிவின் தலைவராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
- சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி முற்பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சிஎல் ராக்கெட் மூலம் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்படவிருக்கிறது. பிறகு இங்கிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ரேஞ்ச் புள்ளிக்கு விண்கலம் செலுத்தப்படவிருக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- தெலங்கானாவில், பத்து லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் மாநகராட்சியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. குத்புல்லாபூர், செரிலிங்கம்பள்ளி மற்றும் எல்பி நகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளர் பட்டியலில்தான், அதிகப்படியான போலி வாக்காளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- மத்திய அரசு 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி 28.08.2023 வழங்கினார்.
- பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ‘பிரைட் ஸ்டாா்’ போா்ப் பயிற்சி எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமானப் படை தளத்தில் 27.08.2023 தொடங்கியது. இந்தப் போா்ப் பயிற்சியில் இந்திய விமானப் படையின் மிக்-29 போா் விமானங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்பது இதுவே முதல் முறை. இந்திய ராணுவத்தின் 150 வீரா்கள் அடங்கிய குழுவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.-LIST OF MILITARY EXERCISES OF INDIA 2023
- நீரஜ் சோப்ரா-உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரா்:ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று 27.08.2023 இரவு நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 88.17 மீ. தொலைவுக்கு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா்.பாகிஸ்தான் வீரா் அா்ஷத் நதீம் 87.82 மீ. தொலைவுக்கு எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். செக். குடியரசு வீரா் ஜேக்கப் வேட்லெச் 86.67 மீ. தொலைவுக்கு எறிந்து வெண்கலம் வென்றாா்
- உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் அரையிறுதியில் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கம் பெற்றாா். அவா் இப்போட்டி வரலாற்றில் தனது முதல் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறாா். உலகின் 9-ஆம் நிலை வீரரான பிரணாய், ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் 21-18, 13-21, 14-21 என்ற கேம்களில், உலகின் 3-ஆம் நிலை வீரரான தாய்லாந்தின் குன்லவத் விதித்சரனிடம் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 16 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.