பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம் (Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojana):
- பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம் என்பது 2021-22 முதல் செயல்படுத்தப்படும் மத்திய நிதியுதவி திட்டமாகும்.
- இத்திட்டம் (i) 'ஆதர்ஷ் கிராமம்', (ii) 'ஆதிதிராவிடர் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான மாவட்ட, மாநில அளவிலான திட்டங்களுக்கு மானியம்' (iii) 'விடுதி' ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பங்களிப்பு:
- ஆதிதிராவிடர் அதிகமாக வாழும் கிராமங்களில் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் தேவையான சேவைகளை உறுதி செய்வதன் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டுக் குறியீடுகளை மேம்படுத்துதல் ஆகும்.
- திறன் மேம்பாடு, வருவாய் பெருக்கத் திட்டங்கள் மற்றும் பிற முன்முயற்சிகள் மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஆதிதிராவிட சமூகங்களின் வறுமையைக் குறைத்தல்.
- தரமான கல்வி நிறுவனங்களிலும், தேவைப்படும் இடங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளிலும், குறிப்பாக முன்னேற விரும்பும் மாவட்டங்கள் ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில், போதுமான உறைவிட வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிதிராவிடர்களின் சேர்க்கையை ஊக்குவித்தல் மற்றும் கல்வியறிவை அதிகரித்தல் ஆகியவை ஆகும்.
- 2021-22 முதல், 5185 பயனாளிகளுக்கு மொத்தம் 46 விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
SOURCE : PIB