CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 04.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 04.12.2024 )

விஞ்ஞானிகா 2024 :

  • ஐஐஎஸ்எஃப் 2024 எனப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான விஞ்ஞானிகா (VIGYANIKA)டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது.
  • சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும், விக்யானிகாவின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பரமானந்த பர்மன் அவர்களின் அறிமுக உரையுடன் அமர்வு தொடங்கியது.
  • விழாவின் முதல் அறிவியல் அமர்வு, "இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்" (From Folklore to Future: An Indian Literary Exploration) என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
  • இந்திய மொழிகளில் அறிவியலை கற்பது என்ற தலைப்பில் ஒரு குழு விவாதமும் நடைபெற்றது.
  • விஞ்ஞானிகா: அறிவியல் இலக்கிய விழாவின் இரண்டாம் நாளில் "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அறிவியல் எழுத்துகள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.


லகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்:

  • கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் (World's Largest Grain Storage Plan)கீழ், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் ஆதரவுடன், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, திரிபுரா ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. 
  • கட்டப்பட்ட 11 சேமிப்புக் கிடங்கில், 3 சேமிப்புக் கிடங்குகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன.


தேசிய சட்டமுறை எடையியல் இணையதளம்:

  • மாநில சட்டமுறை எடையளவு துறைகள் மற்றும் அதன் இணைய தளங்களை ஒருங்கிணைத்து தேசிய சட்டமுறை எடையியல் இணையதளத்தை (National Legal Metrology Portal (eMaap))மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கி வருகிறது. 
  • இந்த இணையதளத்தில் வர்த்தக உரிமங்கள் வழங்குதல், சரிபார்ப்பு, அதன் அமலாக்கம் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவற்றை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், தேசிய சட்டமுறை எடையியல் இணையதள பங்குதாரர்கள் பல மாநில இணையதளங்களில் பதிவு செய்வதற்கான தேவையை இல்லாமல் ஆக்குகிறது. இது வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதுடன் அதன் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.


ரேடார் கட்டமைப்பை மேம்படுத்த மௌசம் இயக்கம்:

  • இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் 'மௌசம் இயக்கம்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

காது கேளாதோருக்காக இந்திய சைகை மொழி கற்பித்தல்:

  • மாற்றுத்திறனாளிகள் குறித்த புள்ளிவிவரங்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை அரசு முதன்மையாக நம்பியுள்ளது. 

  • 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 2.68 கோடி மாற்றுத் திறனாளி நபர்களில் 19 சதவீதத்தினர் செவித்திறன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 
  • சைகை மொழி உரைபெயர்ப்பு பட்டயப் படிப்பை 42 நிறுவனங்களும், காது கேளாதோருக்காக இந்திய சைகை மொழி கற்பித்தல் பட்டயப் படிப்பை 13 நிறுவனங்களும் நடத்துகின்றன. 
  • 2024-25-ம் ஆண்டில், சைகை மொழி உரைபெயர்ப்பு பட்டயப் படிப்பை நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 முதல் 13 ஆகவும், இந்திய சைகை மொழி கற்பித்தல் பட்டயப் படிப்பை நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 இல் இருந்து 42 ஆகவும் அதிகரித்துள்ளது.
  • இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) காது கேளாமை மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு சுரங்கம்:
  • சீனாவின் ஹூனான் மாகாணத்தில் இருக்கும் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்கச் சுரங்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
  • இங்கு 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால்,இந்த தங்கம் சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சீனாவை பாதிக்காமல் இருக்க உதவும்.
  • இந்த தங்கச் சுரங்கம் நிலத்திற்கு அடியில் மிகவும் ஆழமாக அமைந்துள்ளது. அதாவது சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் தங்க நரம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  • தங்க நரம்புகள் என்பது பாறைகளுக்கு இடையே வரி வரியாக இருக்கும் தங்கம் தான். இந்த நரம்புகளில் மட்டும் சுமார் 300 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • அத்துடன் துளையிடப்பட்ட பாறைகளுக்கு நடுவிலும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோராயமாக 1000 மெட்ரிக் டன் தங்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹெலன்கெல்லர் விருது 2024:
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னுதாரன மாதிரி நிறுவனம் என்ற தகுதியின் கீழ் 2024-ம் ஆண்டுக்கான ஹெலன்கெல்லர் விருது ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்திற்கு கிடைத்தது. 



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!