National Biodiversity Strategy and Action Plan (NBSAP)

TNPSC PAYILAGAM
By -
0

National Biodiversity Strategy and Action Plan (NBSAP)

இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம் 

  • உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான 16-வது சி.ஓ.பி கூட்டத்தில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல்திட்டத்தை  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டார். 
  • கொலம்பியாவின் காலியில், அக்டோபர் 30, 2024 அன்று, ‘குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டம்  மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம்’ என்ற சிறப்பு நிகழ்வின் போது இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம் என்பது கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் , மாசுக் கட்டுப்பாடு, உயிரினங்கள் மேலாண்மை மூலம் பல்லுயிர் அச்சுறுத்தல்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்புடன் இணைந்த புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டமானது, 2030-ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், 2050-ஆம் ஆண்டளவில் இயற்கையோடு இயைந்து வாழ்வது என்ற நீண்ட காலப் பார்வையுடன், உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய திட்டமாகும் .
  • இந்தியா தனது செயல்திட்டத்தைப் புதுப்பிப்பதில் 'முழுமையானஅரசு' மற்றும் 'முழுமையான சமூக' அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது . 
  • புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் சுற்றுச்சூழல் சவால்களை ஏற்றுக்கொள்வதுடன் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, இனங்கள் மீட்பு திட்டங்கள் மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு, சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும்  கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது .



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!