GREAT NICOBAR DEVELOPMENT PLAN (Details In Tamil )

TNPSC PAYILAGAM
By -
0

GREAT NICOBAR DEVELOPMENT PLAN


கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் :

  • கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் என்பது சர்வதேச கொள்கலன் டிரான்ஸ் ஷிப்மென்ட் டெர்மினல், விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் பசுமை-வயல் டவுன்ஷிப் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வளர்ச்சி திட்டமாகும்.
  • 'கிரேட் நிக்கோபார் தீவின் முழுமையான மேம்பாடு' என்ற தலைப்பிலான மாபெரும் உள்கட்டமைப்பு திட்டம் ஆனது, நிதி ஆயோக் அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, போர்ட் பிளேயரில் அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தினால் (ANIIDCO) செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • நிகோபார் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு 2022ம் ஆண்டில் இந்திய அரசு ரூபாய் ₹75,000 கோடி (US$9.4 பில்லியன்) ஒதுக்கியுள்ளது
  • கிரேட் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது.
  • மேலும், வங்காள விரிகுடாவின் மிக முக்கியமான மூலோபாய பகுதியில் இவை இடம்பெற்றுள்ளன.
  • எனவே, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளை இந்த தீவுகளில் இருந்து மிக எளிதாக அணுகலாம்.
  • அதனால், இந்த வளர்ச்சி திட்டங்களுக்கு நிக்கோபார் தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் நான்கு பெரிய வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது:

  • நிகோபார் மாவட்டத்தில் உள்ள காலத்திய கடற்கரையில் ஆண்டுக்கு 14.2 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் வகையில் துறைமுகம் அமைப்பது.
  • நிகோபார் மாவட்டத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்தல்.
  • நிகோபார் மாவட்டத்தில் 16,610 எக்டேர் பரப்பளவில் 450 மெகா வாட் திறன் கொண்ட இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் மற்றும் சூரிய மின் ஆற்றல் நிலையங்கள் அமைத்தல்.
  • கடற்கரையில் இரண்டு புதிய பசுமை நகரங்கள் அமைத்தல்




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!