TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMILSOUTH INDIAN HISTORY
சோழப்பேரரசு
SOUTH INDIAN HISTORY
சோழப்பேரரசு
CHOLA EMPIRE-TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 10th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE
1. பண்டைய சோழ அரசின் பகுதி - காவிரி கழிமுகப் பகுதி.
2. பண்டைய சோழ அரசின் தலைநகரம்- உறையூர் (திருச்சிராப்பள்ளி).
3. 9 - ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தை மீட்டெடுத்தவர்-விஜயாலயன்.
4. தஞ்சாவூரைக் கைப்பற்றி தலைநகராக ஆக்கியவர் - விஜயாலயன்.
5. முதலாம் இராஜேந்திரனும் அவருக்குப்பின் வந்தோரும் எந்த இடத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர்- கங்கைகொண்ட சோழபுரம்.
6. சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் - முதலாம் ராஜராஜன் . 985 -1014.
7. ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர்கோவில்) தஞ்சாவூரில் கட்டியவர் - முதலாம் ராஜராஜன்.
8. முதலாம் ராஜராஜன் மகன் – முதலாம் ராஜேந்திரன். 1014 – 1044.
9. முதலாம் ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆண்டு - 1023 .
10. கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்- முதலாம் ராஜேந்திரன்.
11. வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்டது- கங்கைகொண்ட சோழபுரம் கோவில். முதலாம் ராஜேந்திரன்.
12. முதலாம் ராஜேந்திரன் ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற துணைபுரிந்தது – கடற்படை.
13. விஜயாலயன் வழிவந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் – அதிராஜேந்திரன்.
14. யாருடைய ஆட்சி காலத்தில் சோழர்களுக்கும் கீழை சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது - முதலாம் ராஜராஜன்.
15. முதலாம் ராஜராஜனின் மகளான குந்தவையை மணந்த சாளுக்கிய இளவரசர் – விமலாதித்தன்.
16. முதலாம் இராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தவர்- ராஜராஜ நரேந்திரன்.
17. குந்தவை மற்றும் விமலாதித்தனுடைய மகன் - ராஜராஜ நரேந்திரன்.
18. அம்மங்காதேவி மற்றும் ராஜராஜ நரேந்திரனுடைய மகன் - முதலாம் குலோத்துங்கன்.
19. சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்- முதலாம் குலோத்துங்கன்.
20. இலங்கையில் சோழர்களுக்கு சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தவர் - முதலாம் குலோத்துங்கன்.
21. 1279 ல் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ வம்சத்தின் மன்னர் - மூன்றாம் ராஜேந்திர சோழன்.
22. அரசருடைய மூத்தமகன் எவ்வாறு அழைக்கப்பட்டார் – யுவராஜன்.
23. சோழர்கள் நிர்வாகம் வரிசை - பேரரசு - மண்டலங்கள் - நாடுகள் – கூற்றங்கள்.
24. சோழர்களின் நிர்வாகத்தில் மிகச்சிறிய அலகு – கிராமம்.
25. சோழர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம்- ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார்.
26. சோழ ஆட்சியின் கிராம சபை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து தெளிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் அமைந்துள்ள இடம் – காஞ்சிபுரம்.
27. சோழர் ஆட்சிக் காலத்தில் நிலவரி (1/3) – காணிக்கடன்.
28. வேளாளரில் நிலங்களின் உடமையாளர்களாக இருக்க இயலாதவர்-உழுகுடி பிரிவினர்.
29. கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை:
1. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் (வார்டு) ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
2. மொத்தம் இருந்த குடும்பங்கள்- 30.
3. போட்டியிடும் ஆடவர் வயது -35 முதல் 70 .
4. வேதங்களிலும் சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நில உரிமையாளராகவும் சொந்த வீடு உடையவராகவும் இருக்க வேண்டும்.
30. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்- பிரம்மதேயம்.
31. சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - பள்ளிச் சந்தம்.
32. கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - தேவதான கிராமங்கள்.
33. வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- வேளாளர்.
34. 16- மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணையை முதலாம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.
35. நீரைக் கொண்டு வருவது – வாய்க்கால்.
36. நீரை வெளியேற்றுவது – வடிகால்.
37. நிர்வாக பிரிவில் மட்டத்தில் பயன்பட்டது- நாடு வாய்க்கால்கள்.
38. அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் - ஊர் வாய்க்கால்.
39. திருமுறைகளை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி.
40. எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவியவர்- முதலாம் ராஜேந்திரன்
41. புதுச்சேரி அருகே திருபுவனை எனும் ஊரில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு - 1048.
42. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமுக்கூடலில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு- 1067.
43. பெரியபுராணம்,கம்பராமாயணம் யாருடைய காலத்தில் இருந்த உன்னதமான இலக்கியங்களாகும் – சோழர்கள்.
44. சோழர்களின் காலத்தில் வணிகம் மேற்கொண்ட வணிகக்குழு கில்டு அமைப்புகள்:
1. கடல் கடந்து வணிகம் செய்பவர்கள்- அஞ்சு வண்ணத்தார்.
2. உள் நாட்டு வணிகர்கள்- மணி கிராமத்தார்.
45. அஞ்சு - வண்ணத்தார் குழு உள்ளடக்கியது:
1. மேற்கு ஆசியர்கள்
2. அராபியர்கள்
3. யூதர்கள்
4. கிறிஸ்தவர்கள்
5. இஸ்லாமியர்கள்
46.அஞ்சு - வண்ணத்தார், மணி – கிராமத்தார் காலப்போக்கில் எவ்வாறு ஒருங்கிணைந்தன- ஐநூற்றுவர் , திசை - ஆயிரத்து ஐந்நூற்றுவர்.
CHOLA EMPIRE-TNPSC HISTORY -வினா விடைகள் (11th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE
1. பெ.ஆ.859 இல் பிற்கால சோழ அரசை நிறுவியவர்- விஜயாலய சோழன்.
2. விஜயாலயனுக்குப் பின் வந்த சோழ அரசர்கள் யாருடைய மரபில் வந்தவர்கள் - கரிகால சோழன்.
3. நாட்டின் எல்லையையும் ஆட்சி முறையின் அடித்தளத்தை விரிவுபடுத்தியவர் - முதலாம் பராந்தகன்.
4. சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கிய வடிவிலான வரலாற்று நூல்கள் :
1. கலிங்கத்து பரணி
2. குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ்
3. மூவருலா.
5. சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்கள் : நன்னூல் , நேமிநாதம் , வீரசோழியம்.
6. சோழர் காலத்தில் எழுதப்பட்ட பிற நூல்கள்- பாண்டிக்கோவை, தக்காயகப்பரணி.
7. சோழ அரசு மரபின் கீழ் இருந்த ஆட்சி பகுதி - சோனாடு (அ) சோழ நாடு.
8. சோழ அரசின் மையப்பகுதி - காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி.
9. சோழமண்டலம் என்ற சொல் ஐரோப்பியர் நாவில் திரிபு அடைந்தது- கோரமண்டல்.
10. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்திய பகுதி -மும்முடிச்சோழ மண்டலம்.
11. சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் - முதலாம் ராஜராஜன்.
12. மாலத்தீவு, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் ராஜராஜன் புதிதாக வென்ற பகுதியில் ஒரு கோயில் கட்ட ஆணை பிறப்பித்தார் அக்கோவில் - சிவ தேவாலே. சிவாலயம்.
13. முதலாம் ராஜராஜன் மகன் - முதலாம் ராஜேந்திரன்.
14. ராஜராஜனால் மகாதிட்டா என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில்-இராஜராஜேஸ்வரம்.
15. முதலாம் ராஜேந்திரனால் வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கட்டப்பட்டது -கங்கைகொண்ட சோழபுரம்.
16. ஸ்ரீ விஜயா மீது தாக்குதல் தொடுத்த படை - ராஜேந்திரனின் கடற்படை
17. குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா யாரால் தோற்கடிக்கப்பட்டது - முதலாம் ராஜேந்திரன்.
18. கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவர் - முதலாம் ராஜேந்திரன்.
19. மேலை சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜராஜன் போர்தொடுத்த ஆண்டு-1003.
20. மேலை சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜேந்திரன் போர்தொடுத்த ஆண்டு-1009.
21. சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணி அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் (வாயிற்காப்போன்) சிலை உள்ள இடம் - கும்பகோணம்.
22. முதலாம் பராந்தகன் சூடிக்கொண்ட பட்டம் - மதுரை கொண்டான்.
23. முதலாம் குலோத்துங்க சோழன் சூடிக்கொண்ட பட்டம் - சுங்கம் தவிர்த்த சோழன்
24. முதலாம் ராஜராஜ சோழன் சூடிக்கொண்ட பட்டங்கள் - மும்முடி சோழன் , ஜெயம் கொண்டான், சிவபாதசேகரன் , அருண்மொழி , ராஜகேசரி.
25. முதலாம் ராஜேந்திரன் சூடிக்கொண்ட பட்டங்கள்- முடிகொண்ட சோழன் , கங்கை கொண்டான் , கடாரம் கொண்டான்.
26. கடவுளுக்கு இணையாகப் பெருமான் (அ) பெருமகன், உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் ,என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
27. முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் தங்களுடைய ராஜ குருக்களாக யாரை கல்வெட்டு குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்- ஈசான், சிவன்,சர்வ சிவன்.
28. பிற்காலத்தில் சோழ அரசாகள் சூடிக்கொண்ட பட்டங்கள்- சக்கரவர்த்தி (பேரரசர்), திருபுவன சக்கரவர்த்தி (மூன்று உலகங்களுக்கானப் பேரரசர்) .
29. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு இறையிலியாக அளித்த நிலப்பரப்பு-பிரம்மதேயம் , சதுர்வேதி மங்கலம்.
30. சோழரிடம் இருந்த போர் யானைகள்- 60000.
31. படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமை- படைப்பற்று.
32. படைப் பிரிவின் தலைவர்- நயகம் .(படைமுதலி)
33. படைத்தளபதி -சேனாதிபதி. (தண்டநாயகம்)
34. சோழர் காலத்தில் இருந்த பல்வேறு உள்ளாட்சி குழுக்கள் - ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார்.
35. நில உடைமை சார்ந்தோரின் குடியிருப்பு - ஊர் .வேளாண்வகை கிராமம் என அழைக்கப்பட்டது.
36. பிராமணர்களின் குடியிருப்பு - பிரம்மதேயம்.
37. முதலாம் இராஜராஜன் ஆட்சியில் மாமல்லபுரம்- மாநகரம் என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
38. உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காக சுங்கவரியை நீக்கிய சோழ அரசன் - முதலாம் குலோத்துங்க சோழன்.
39. சுங்கம் தவிர்த்த சோழன் -முதலாம் குலோத்துங்க சோழன்.
40. வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்கள் மன்றம் -நாட்டார்.
41. நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் அளிக்கப்பட்ட பட்டங்கள்:
1. ஆசுடையான் - நில உரிமையாளர்.
2. அரையன் - வழி நடத்துவோர்.
3. கிழவன் - தலைவர்.
42. நாட்டாரின் நிர்வாகப் பணிகளை ஆவணபடுத்தியவர்கள் - நாட்டுக் கணக்கு , நாட்டு வையவன்.
43. உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல்:
1. கிராமம் - 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
2. தேர்தலில் போட்டியிட வயது - 35 முதல் 75 வயது வரை இருக்க வேண்டும்.
3. வேதங்களிலும் பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
44. சோழர் காலத்தில் நில வருவாய் நிர்வாகத்திற்கு என தனியாக ஒரு துறை என்ன பெயரில் இயங்கியது- புறவு வரி திணைக்களம். தலைவர் - புறவு வரித்திணைக்கள நாயகம்
45. சோழர் காலத்தில் நில அளவிட்டு பணியில் ஈடுபட்டவர்கள் -நாடு வகை செய்கிற.
46. சோழர் காலத்தில் நில அளவீடு செய்ய பயன்படுத்தப்பட்ட அலகுகள் - குழி, மா, வேலி,பட்டி, பாடகம்.
47. சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள்- இறை,காணிகடன்,இறை கட்டின காணிகடன்,கடமை.
48. சோழர் காலத்தில் விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி -இறை கட்டின நெல்லு.
49. நீர் வடக்கு தெற்காக ஓடுவது- வடி.
50. நீர் கிழக்கு மேற்காக ஓடுவது -வாய்க்கால்.
51. வரியாக வகசூலிக்கப்பட்ட நெல் - களம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்பட்டது.
52. ஒரு களம் என்பது- 28 கிலோ .
53. முதலாம் ராஜராஜன் வரிவசூல் முறைப்படுத்தினார்.
54. ஒரு வேலி நிலத்திற்கு -100 களம் வரியாக வசூலிக்கப்பட்டது.
55. ஒரு வேலி- 6.5 ஏக்கர்.
56. சோழர் காலத்தில் கால்வாய்களுக்கு அரசர்கள் , அரசிகள் கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருந்தன:
1. உத்தம சோழ வாய்க்கால்.
2. பஞ்சவன் மாதேவி வாய்க்கால்.
3. கணபதி வாய்க்கால்.
57. சோழர் காலத்தில் கிராம சபைகள் பாசனக் குளங்களை பழுதுபார்க்க வசூலிக்கப்பட்ட வரி - ஏரி ஆயம்.
58. இராஜராஜ சோழனுடைய ஆசான்- கரூர் தேவன்.
59. கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அங்குள்ள ஏரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க 16 மைல் நீளமுள்ள ஒரு உறுதியான கட்டுமானத்தை எழுப்பியுள்ளார்.
60. அதை ராஜேந்திர சோழன் "ஜலமய ஜெயஸ்தம்பம்" என்று குறிப்பிடுகிறார்.
61. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்த அரேபிய வரலாற்றாசிரியரான -அல்பெரூனி இக்கட்டுமான அமைப்பை கண்டு வியந்தார்.
62. நிலக்கொடை அளிக்கப்பட்ட கோயில்கள் -தேவதானம்.
63. சோழர் காலத்தில் பிரபலம் அடைந்த புராணக் கடவுளர்கள் – சிவன்,விஷ்ணு.
64. சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம் யாரால் இயற்றப்பட்டது -மெய்கண்டர்.
65. சோழ அரசர்கள் - தீவிர சைவர்கள் .
66. முதலாம் பராந்தகனும் ,உத்தமச் சோழனும் - சைவ சமயத்தை வளர்க்க நிதி உதவியும் நில கொடையையும் அளித்தார்கள்.
67. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் முதலாம் இராஜராஜனும் அவருடைய மனைவியும் யாரை வணங்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது - சிவன்.
68. ராஜராஜனுடைய பட்டங்களில் ஒன்று - சிவபாதசேகரன். சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது பொருள்.
69. சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி.
70. ஆடல்வல்லான் - நடராஜன்.
71. விண்ணப்பம் செய்வோர் - கோயில்களில் பாடல்களைப் பாடுவோர்.
72. பள்ளிப்படை (கோவில்) - அரசர்கள் புதைக்கப்படும் இடங்கள்.
73. கோயிரமர் , கோயில் கணக்கு - கோயில் கணக்காளர்.
74. தேவகன்னி - கடவுளின் பிரதிநிதி.
75. ஸ்ரீ வைஷ்ணவர், கண்டேசர் - கோயில் மேலாளர்.
76. சங்கர பாடியார் - எண்ணெய் ஆட்டுபவர்கள்
77. கங்கைகொண்ட சோழபுரம் - முதலாம் ராஜேந்திரன்.
78. சோழ கங்கம் என்ற பாசன ஏரி - முதலாம் ராஜேந்திரன்.
79. பிரகதீஸ்வரர் கோவில் கருவறை மீது உள்ள விமானம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது
80. தாராசுரம் கோவில் - இரண்டாம் இராஜராஜன்.
81. கீழப்பழுவூர் , திருவெற்றியூர் கோயில்களில் சித்தரிக்கப்பட்டுள்ள நடன சிற்ப ஓவியங்கள் - குடக்கூத்து ,சாக்கைக்கூத்து.
82. சோழர் காலத்திலிருந்து வணிக குழுக்கள்:
1. அஞ்சுவண்ணத்தார் - கடல்வழி வணிகர்கள்.
2. மணிக்கிராமத்தார் - உள்நாட்டு வணிகம் செய்தவர்கள்.
3. ஐநூற்றுவர் , திசை ஆயிரத்து ஐநூற்றுவர், வளஞ்சியர்.
83. வளஞ்சியர் குழு வெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி எங்கு உள்ளது - புதுக்கோட்டை.
84. ஆற்காடு பகுதியிலுள்ள எண்ணயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவியவர் - முதலாம் ராஜேந்திரன். 340 மாணவர்கள், 14 ஆசிரியர்கள்.
85. இரு சமஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் இடம் :
1. 1048 - புதுச்சேரி.
2. 1061 - திருப்புவனம்.