Friday, November 10, 2023

சோழர் காலம்-இலக்கியும் -கலையும் -SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
 SOUTH INDIAN HISTORY

சோழர் காலம்-இலக்கியும் -கலையும்  


இலக்கியம்:

  1. சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது.
  2. சேக்கிழாரால் பெரியபுராணமும் (திருத்தொண்டர் புராணம்) திருத்தக்க தேவரால் சீவகசிந்தாமணியும் எழுதப்பட்டன.
  3. உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் சோழர் காலத்தவரே ஆவார்.

கலையும் கட்டிடக்கலையும்:

  1. திராவிட பாணியிலான கலைகளும், கட்டிடக்கலையும் சோழர்கள் காலத்தில் முழு வடிவத்தைப் பெற்றன.
  2. திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் திருவண்ணாமலை, சுசீந்திரம், திருவனந்தபுரம், உடுப்பி போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்கள் சிறப்பு மிக்கவை.
  3. நார்தா மலையின் விஜயாலய சோழீஸ்வரம் கொடும்பாளுரில் ஐவர் கோயில் ஆகியன முற்கால சோழர்காலத்தை சேர்ந்தவை.
  4. பிரகதீஸ்வரர் ஆலயம் உலகத் தொன்மையான சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் விமானத்தின் உயரம் 216 அடி ஆகும்.
  5. தஞ்சாவூர் சுப்பிரமணியர் ஆலயம், தாராசுரம், அறிவட்டேஸ்வரர் கோவில் கும்பகோணம் அருகே திருபுவனம் என்னும் இடத்தில் உள்ள கம்பஹரேஸ்வரர் அல்லது திருபுவனேஸ்வரர் கோவில் ஆகியன பிற்கால சோழர்களால் கட்டப்பட்டவை.

சிற்பங்கள்:

  1. முதலாம் இராஜராஜனின் சிற்பம் கலைநயம் கொண்டது.
  2. எண்கரங்களுடன் காட்சி தரும் துர்க்கை சிற்பம் மிகவும் அழகு வாய்ந்தது.
  3. கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள நடராசர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய உலோக சிலைகள் சோழர் கலையம்சத்திற்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

ஓவியங்கள்:

  • சோழர்களது சுவர் ஓவியங்கள் தஞ்சாவூர், திருமையம், காஞ்சி கைலாசநாதர் கோயில், நார்தாமலை விஷ்ணு கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.

இசை

  1. நுண்கலை எனப்படும் இசைக்கலை வ வளர்ச்சிபெற்றது.
  2. கர்நாடக இசைக்கு சோழர்காலத்தில்தான் அடித்தளம் இடப்பட்டது.
  3. பரதநாட்டியம் என்னும் அழகு மிளிரும் ஆடற்கலையும் தோன்றியது.


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: