Thursday, October 26, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.10.2023

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.10.2023


உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமாக இங்கிலாந்து :

உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: “தொழிற்புரட்சி, மின்சாரம் கண்டுபிடிப்பு, இணையத்தின் தோற்றம் போல செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பும் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.புதிய வகை செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஆய்வு செய்வதிலும், சோதனை செய்வதிலும் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதால், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமாக இங்கிலாந்து விளங்கும்.

பின்பு முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிவித்த ரிஷி சுனக், “இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகின் அறிவை மேம்படுத்தும். மேலும் இது புதிய ஏஐ வகைகளை கவனமாக ஆய்வு செய்து, சோதிக்கும்” எனக் கூறினார்.

ஹெத்வாக் (Health Walk)

நவம்பர் 4 முதல் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் ஹெத்வாக் என்னும் ஆரோக்கிய நடைபயணத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் பெண்கள்:

கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் போப் பிரான்சிஸின் தலைமையின் கீழ் நடைபெறும் வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்று வாக்களிக்க உள்ளனர்.

ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப் ஆண்டவராக கடந்த 2013 முதல் இருக்கிறார். போப் ஆண்டவருக்குக் கீழ் கர்தினால்கள், பிஷப், பாதிரியார்கள் உடனூழியர்கள்(டீக்கன்) போன்றோர் உள்ளனர். கர்தினால்கள்தான் போப் ஆண்டவரைத் தேர்வு செய்கின்றனர். கர்தினால்களில் ஒருவர் போப் ஆண்டவராக தேர்வாகிறார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸின் தலைமையின் கீழ் நடைபெறும் வாடிகன் கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபை குறித்த முக்கிய முடிவுகளில், பல்வேறு பதவிகளில் உள்ள ஆண்கள் மட்டுமே வாக்களித்தது வந்தனர். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரப்பட்டு வந்தது. அந்த வகையில் முதல்முறையாக வாடிகன் கூட்டத்தில் பெண்கள் பங்கேற்று வாக்களிக்கவிருக்கின்றனர். சுமார் 2,000 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த கூட்டத்தில் பெண்கள் பங்கேற்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பிஐஎஸ் கேர் ஆப் என்ற கைப்பேசி செயலி :

நாட்டில் தங்கம் வாங்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணையமானது பிஐஎஸ் கேர் ஆப் என்ற கைப்பேசி செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் வழியாக, ஐஎஸ்ஐ மற்றும் ஹால் மார்க் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை அடையாளம் காண உதவுகிறது.

இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளது:

NSTC-ன் குழுவின் தலைவரான ஐசக் பரிந்துரையின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உள்ளிட்ட கல்வி வாரியங்கள் பின்பற்றி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பள்ளி பாட புத்தகத்தகங்களில் இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை (NEB 2020) அடிப்படையில் பாடங்களில் மாற்றம் கொண்ட வர 19 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்ட தயாரிப்பு குழு (NSTC) உருவாக்கப்பட்டுள்ளது.

NCERT – National Council of Educational Research and Training – 1961

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதனை :

சீனாவில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் இதுவரை 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். போட்டிகள் முடிய இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா, 2018-ல் இந்தோனேஷியாவில் பெற்ற 72 பதக்கங்களே முன்பு அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 39 வெண்கல பதக்கங்கள் உள்பட 80 பதக்கங்களை இதுவரை இந்திய வீரர்- வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

வாழ்விட உரிமை :

வனஉரிமைச்சட்டம் 2006-ன் சதிஸ்கரின் பைகா பழங்குடியினருக்கு (Baiga Tribes) வாழ்விட உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பைகா (சத்திஸ்கர்), கமர் (சத்திஸ்கர்), பாயா (மத்தியபிரதேசம்) போன்ற பழங்குடியினருக்கு மட்டுமே வாழ்விட உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்ஃபேட் & பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல் :

நடப்பு ராபி பருவத்தில் பாஸ்ஃபேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில் (2023 அக்.1 முதல் 2024 மாா்ச் 31 வரை) யூரியா அல்லாத உரங்களுக்கான மானிய விலையை நிா்ணயிக்கும் உரத் துறையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டை-அமோனியம் பாஸ்ஃபேட் உர மூட்டை ரூ.1,350 என்ற பழைய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாஷியம் உர மூட்டை ரூ.1,470 என்ற பழைய விலையிலும், சிங்கிள் சூப்பா் பாஸ்ஃபேட் உர மூட்டை ரூ.500-க்கும் வழங்கப்படும். மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (பொட்டாஷியம் கிளோரைட்) உர மூட்டையின் விலை ரூ.1,700-இல் இருந்து ரூ.1,655-ஆக குறையும்

2022-23 ஆம் ஆண்டில் லிக்னைட் உற்பத்தியில் தமிழகம் :

2022-23 ஆம் ஆண்டில் லிக்னைட் உற்பத்தியில் தமிழகம் 22.480 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி அமைச்சகம் தரவுகள் படி உற்பத்தியில் தமிழகம் 49.97% ஆகவும், குஜராத் 26.27% ஆகவும், ராஜஸ்தான் 22.67% ஆகவும் உள்ளது. இந்தியாவில் லிக்னைட் படிவுகள் முதன்மையாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அதிகமாக கிடைக்கின்றன..மேலும் ஒடிசா, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் குறைவாக கிடைக்கின்றன.

தேசிய பழங்குடி விழா

குஜராத், அகமதபாத் நகரில் நடைபெறும் தேசிய பழங்குடி விழாவினை (National Tribal Festival) பழங்குடியின அமைச்சர் அர்ஜீன் முண்டா தொடங்கி வைத்துள்ளார்.

பழங்குடியின கெளரவ தினம் (Tribal Pride Day) – நவம்பர் 15

ஐசார்ட் டேலன்ட் கனெக்ட் போர்டல் :

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை தேடுபவர்களுக்காக ஐசார்ட் டேலன்ட் கனெக்ட் போர்டலானது (iStart Talent Connect Portal) துவங்கப்பட்டுள்ளது

கெளரவ உதவித்தொகை – ராஜஸ்தான் :

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 கெளரவ உதவித்தொகையும், ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுமென அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக நீளமான ரோப்கார் சேவை :

முசோரி-டேராடூன் இடையே இந்தியாவின் மிக நீளமான ரோப் கார் சேவையானது (Rope car service)  தொடங்கப்பட உள்ளது.

உத்தரபிரதேச அரசு- மகிளா சாரதி :

உத்தரபிரதேச அரசு மகிளா சாரதி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு பொது போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதாகும்.இது சக்தி அபியானின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்வேறு திட்டங்களின் மூலம் உத்தரபிரதேசத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளிப்பதே சக்தி அபியான் திட்டத்தின் நோக்கமாகும்.

ஏவுகணை பரிசோதனை :

பாகிஸ்தான் நாடானது கெளரி ஏவுகணையை (Ghauri Missile) விண்ணில் ஏவி பரிசோதித்துள்ளது.

அமெரிக்க விருதுகள் :

இந்திய வம்சாளியைச் சேர்ந்த அசோக் காட்கிலுக்கு (Ashok Gadgil) தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய பதக்கம் புதுமைக்கான தேசிய விருதும், சுப்ரா சுரேஷ்க்கு (Supra Suresh) தேசிய அறிவியல் பதக்கமும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் விருதுகளை வழங்கியுள்ளார்.

37வது தேசிய விளையாட்டு போட்டி :

37வது தேசிய விளையாட்டு போட்டிக்கு இலச்சினையாக காட்டெருமையான மோகா (Moga) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் தெலுங்கானாவின் தருணும், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் ஹரியானாவின் அனபமா உபாத்யாயும் தங்க பதக்கம் வென்றுள்ளனர்

அதிவேக சதம் :

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து உலககோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்த சாதனை நபர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

மிகவும் குறைந்த வயதில் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வென்றவர்:

16 வயதான உன்னதி ஹூடா 2023 ஆண்டிற்கான அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்றார். .அவர் சக இந்தியரான சாமியா இமாத் ஃபரூக்கியை 21-16, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தார். மேலும் மிகவும் குறைந்த வயதில் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் என்ற வரலாறு சாதனை படைத்தார்.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: