TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.10.2023 - 16.10.2023
தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம்:
தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது. சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.734.91 கோடியில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை ஹைதராபாதைச் சோ்ந்த நிறுவனமும், திட்ட மேலாண்மை பணியை ரூ.14.56 கோடியில் மும்பையை சோ்ந்த நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.
வணிகா்களுக்கான சமாதானத் திட்டம் தொடக்கம் :
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், சுமாா் ஒரு லட்சம் வணிகா்களுக்கான வரி நிலுவையை ரத்து செய்து அதற்கான சான்றுகளை வழங்கும் நடைமுறையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006-இல்அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் பல்வேறு விற்பனை வரி சாா்ந்த மேலும் 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், வணிகா்களிடமிருந்து வரி நிலுவையை எளிதாக வசூலிக்கும் வகையில், 1999-இல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, 2002, 2006, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தொடா்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வணிகா்களின் நீண்டகால வரி நிலுவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.
மீண்டும் திட்டம்: வணிகா்களின் நீண்ட கால வரி நிலுவைகளை எளிய முறையில் வசூலிக்கும் பொருட்டு சமாதானத் திட்டத்தை தற்போது, முதல்வா் ஸ்டாலின் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளாா்.
அப்துல்கலாம் சிலை (Abdulkalam Statue)
மாணவர்கள் தினமான அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியசுத்தலைவரான ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
மொபைல் முத்தமா (Mobile Muthamma)
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் க்யூஆர்கோடு ஸ்கேன் வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல் முத்தமா என்னும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
ரவிந்திரநாத் தாகூர் சிலை
வியட்நாம் நாட்டில் பாக்நின் மாகாணத்தில் ரவிந்திரநாத் தாகூர் சிலையானது (Rabindranath Tagore Statue) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.கில் (M.S.Gill)
1996-2001 காலம் வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய எம்.எஸ்.கில் (86) காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சரான இவர் 2000-ல் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.
கின்னஸ் சாதனை
இந்தியாவின் 60 சாதனைகளானது 2024ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தக பதிப்பில் இடம் பிடித்துள்ளன.
அம்பேத்கர் சிலை (Ambedkar statue)
அமெரிக்காவின் மேரிலேண்ட் மகாணத்தில் அகோக்கீக் நகரில் அம்பேத்கர் சர்வதேச மையத்தால் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையானது திறந்து வைக்கப்பட்டுள்ளது
சிற்பக்கலைஞரான ராம் சுதாரால் சமத்துவசிலையாக குறிப்பிடப்படும் அம்பேத்கர் சிலையை வடிவமைக்கப்பட்டது.
சைக் (Psyche)
சைக் (Psyche) என்ற சிறுகோளினை ஆய்வு செய்வதற்காக நாசா மற்றும் ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனம் இணைந்து விண்கலணை விண்ணில் செலுத்தியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 50கோடி கி.மீ தொலைவில் அமைந்துள்ள சைக் சிறுகோளானது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
பவானி தேவி
ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியின் மகளிர் சப்ரே பிரிவில் இந்தியா வீராங்கனையான பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஹூபர்ட் ஹர்காக்ஸ்
ஷாங்காய் மாஸ்டர் ஆடவர் டென்னிஸ் போட்டியுில் (சீனா) போலந்து நாட்டினைச் சார்ந்த ஹூபர்ட் ஹர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்று தனது இரண்டாவது மாஸ்டர் சாம்பியன் பட்டத்தினை தனதாக்கினார்.
ஜெஸிகோ பெகுலா
கொரிய மகளிர் டென்னிஸ் போட்டியில் (தென்கொரியா) அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையா ஜெஸிகோ பெகுலா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 15
15th October உலக மாணவர் தினம் : கருப்பொருள்: “Fail: Stands for First Attempt in Learning”.டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.
15th October கிராம்புற பெணகளின் சர்வதேச தினம் : கருப்பொருள்: “Rural Women Cultivating Good Food for All”
15th October உலகளாவிய கை கழுவும் தினம் (Global Hand Washing Day): கருப்பொருள்: “Clean hands are within reach”.
15th October கர்ப்பம் மற்றும் குழந்தை இழப்பு தினம் (Pregnancy & Infant Loss Day) :
15th October கர்ப்பம் மற்றும் குழந்தை இழப்பு தினம் :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 16
16th October உலக உணவு தினம் : கருப்பொருள்: “Water is life, Water is Food. Leave no one behind”.
16th October உலக மயக்க மருந்து தினம் (World Anesthesia Day): கருப்பொருள்: “Anesthesia and Cancer Care”.
16th October உலக முதுகெலும்பு தினம் (World Spine Day): கருப்பொருள்: “Move Your Spine”.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்