TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.10.2023
முதல்வர் பெண் சக்தி பிரச்சாரம்
முதல்வர் பெண் சக்தி பிரச்சாரம் (Mukhyamantri Mahila Sashaktikaran Abhiyan) என்ற திட்டமானது மகாராஷ்டிராவிலுள்ள பெண்கள் புதிய தொழில் தொடங்குதல், தொழில் தொடங்க வங்கிக்கடன் பெறுதல் மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைபடுத்தல் தொடர்பான பயிற்சி அளிக்கும் திட்டமாக மகராஷ்டிராவில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் பெண் சக்தி பிரச்சார திட்டமானது 01.10.2024 வரை செயல்பாட்டில் இருக்கும்
16 வது வேளாண் அறிவியல் மாநாடு:
16 வது வேளாண் அறிவியல் மாநாடு கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியாவின் வேளாண் உணவு அமைப்புகளை நீடித்த நிறுவனங்களாக மாற்றுவது பற்றிய அறிவியல் உரையாடலை உருவாக்குவது இம்மாநாட்டின் நோக்கமாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் -மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் வேளாண் அறிவியல் மாநாடு கேரளாவில் முதன்முறையாக நடைபெறுகிறது.
வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் மற்றும் நிலம், நீர் தொடர்புடைய நீடித்த பிரச்சனைகள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், தயாரிப்புகள், வேளாண் இயந்திரங்கள், பருவநிலை நடவடிக்கை, பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க அல்லது மாற்று எரிசக்தி, துல்லிய பண்ணையம், மாற்று வேளாண் முறைகள், கடலோர வேளாண்மை, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட 10 கருப்பொருள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.
உலகளாவிய இந்தியர் விருதானது :
கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் உலகளாவிய இந்தியர் விருதானது எழுத்தாளரும், சமுக சேவகருமான சுதா மூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்ப்ரிதி கூட்டு இராணுவப்போர் பயிற்சி (Sampriti Joint Army Combat Exercise)
மேகாலயாவின் உம்ரோய்யில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 11வது சம்ப்ரிதி கூட்டு இராணுவப் போர் பயிற்சியானது நடைபெற்றது.
இந்தியா-தான்சானியா ஒப்பந்தம்
தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசன் (முதல் பெண் அதிபர்) முன்னிலையில் எண்மயமாக்கல், கலாச்சாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள், வர்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் போன்ற 6 ஒப்பந்தங்களானது இந்தியா-தான்சானியா இடையேயான 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் இந்தியா-தான்சானியா இடையே பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பினை மேற்கொள்ள பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
கத்தார் கிராண்ட் ஃப்ரீ (Qatar Grand Prix) :
கத்தார் கிராண்ட் ஃப்ரீ (Qatar Grand Prix) 17வது ரேஸ் போட்டியில் மேக்ஸ் வெர்ஸ்டாபென் (ரெட்புல் அணி) சாம்பியன் பட்டத்தை வென்று இந்த சீசனின் 14வது வெற்றி பெற்றுள்ளார்.
2021, 2022, 2023 ஆண்டுகள் என ஹாட்ரிக் சாம்பியான மாறியுள்ளார்.
மெக் லாரென் அணி வீரர்களான ஆஸ்கார் பியாஸ்திரி, லாண்டோ நோரிஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 10
10th October தேசிய அஞ்சல் தினம்
10th October உலக மனநல தினம் :கருப்பொருள்: “Mental Health is a Universal Human Right”.
10th October மரண தண்டனைக்கு எதிரான தினம்
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment