நாலாயிர திவ்விய பிரபந்தம்
பன்னிரு ஆழ்வார்களும் திருமாலின் அழகில், அருளில் மயங்கி பல பாடல்களைப் பாடினார்கள். ஆழ்வார்களின் காலத்திற்கு பின் வந்த நாதமுனிகள் ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்தையும் தொகுத்தார், அவை நாலாயிர திவ்விய பிரபந்தம் என அழைக்கப்படுகிறது.
பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை, 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.
இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு.
முதலாயிரம் பாடல்கள்
இயற்றிய ஆழ்வார்- நூலின் பெயர் - பாடல்கள் எண்ணிக்கை
பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (12), திருமொழி (461)ஆண்டாள் – திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (105)திருமழிசை ஆழ்வார் – திருசந்தவிருத்தம் (120)தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (45), திருப்பள்ளி எழுச்சி(10)திருப்பாணன் ஆழ்வார் – அமலனாதிபிரான்(10)மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (11)
இரண்டாவது ஆயிரம் பாடல்கள்
இயற்றிய ஆழ்வார்- நூலின் பெயர் - பாடல்கள் எண்ணிக்கை
திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி (1084)
திருகுறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம் (30)
மூன்றாவது ஆயிரம் பாடல்கள்
இயற்றிய ஆழ்வார்- நூலின் பெயர் - பாடல்கள் எண்ணிக்கை
பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி (100)
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி (100)
பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி (100)
திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி (96)
நம்மாழ்வார் – திருவிருத்தம் (100), திருவாஞ்சியம் (7), பெரிய திருவந்தாதி (87)
திருமங்கை ஆழ்வார் – திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (78)
திருவரங்கத்தமுதனார் – இராமானுச நூற்று அந்தாதி (108)
நான்காவது ஆயிரம் பாடல்கள்
இயற்றிய ஆழ்வார்- நூலின் பெயர் - பாடல்கள் எண்ணிக்கை
நம்மாழ்வார் – திருவாய்மொழி (1102)
பன்னிரு ஆழ்வார்கள்:
1. பொய்கையாழ்வார் - ஸ்ரீ காஞ்சியதோக்தகாரி
2. பூதத்தாழ்வார் - திருக்கடல் மலை
3. பேயாழ்வார் - மயிலை பெருமாள்
4. திருமிழிசையாழ்வார் - திருமிழிசை
5. நம்மாழ்வார் - திருக்குருகூர்
6. மதுரகவியாழ்வார் - திருக்கோளூர்
7. குலசேகராழ்வார் - மலைநாடு (சேரநாடு)
8. பெரியாழ்வார் - ஸ்ரீவில்லிபுத்தூர்
9. தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமண்டங்குடி
10. திருப்பாணாழ்வார் - உறையூர் நாச்சியார்
11. திருமங்கையாழ்வார் - திருவாலி திருநகரி
12. ஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர்.
1.பொய்கையாழ்வார்
- பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
- பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
- எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
- பாடல்கள் : 100
- சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.
- அருளிய திருநாமம் – ‘வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே”
- 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக
- வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
- சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
- இடராழி நீங்குகவே என்று !
2.பூதத்தாழ்வார்
- பிறந்த ஊர் : மகாபலிபுரம்
- பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
- சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.
3.பேயாழ்வார்
- பிறந்த ஊர் : மயிலாப்பூர்
- பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
- சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம்
- 'அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
- மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
- பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
- முன்னம் கழலும் முடிந்து'
4.திருமழிசையாழ்வார்
- பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
- பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
- தந்தை : பார்க்கவ முனிவர்
- தாய் : கனகாங்கி
- எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
- பாடல்கள் : 216
- சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
5.பெரியாழ்வார்
- பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
- தந்தை : முகுந்தர்
- தாய் : பதுமவல்லி
- பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
- பாடிய பாடல் : 473
- இயற்பெயர் – விஷ்ணுசித்தர்.
- வடபெருங்கோயிலுடையானுக்கு திருமாலை கட்டி சமர்பித்து வந்தார்.
- இவர் அருளியது – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
- நாராயணர் இவர் கனவில் கூறியபடி, மதுரை பாண்டியன் அவைக்களம் சார்ந்து திருமாலே பரம்பொருள் என நிறுவிக் கிழியை இறுத்தார்.
- நாலாயிர திவ்விய பிரபயதத்தில் முதல் பாடல் இவருடையது
- வரலாற்று குறிப்புகள் உள்ளடங்கிய பாடல்களை பாடியவர் – பெரியாழ்வார்
6.ஆண்டாள்
- பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
- தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
- பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
- பாடிய பாடல் : 173
- சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள்.
- வில்லிப்புத்தூரில் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- பெரியாழ்வாரின் வளர்ப்புமகள்.பெரியாழ்வார் இவருக்கு இட்ட பெயர் கோதை
- இவர் பூமகள் ஆம்சமாக பிறந்தவர்.
- பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை .
- இது பாவைப்பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
- திருப்பாவையின் பாக்கள் முப்பதும் பொற்சக கலிப்பா வகையைச்சார்ந்தது.
- வேதம் அனைத்திற்கும் வித்தாவது திருப்பாவை என ராமானுஜர் கூறுகிறார்
- திருப்பாவையின் மீதுள்ள ஆர்வத்தால் இவர் திருப்பாவை ஜீயர் எனப் புகழப்படுகிறார்
- ஆன்டாள் எழுதிய திருப்பாவை, நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக உள்ளது .
- இவர் திருமாலை மணம் செய்வதாக கனாக்கண்டு பாடிய வாரணம் ஆயிரம் என்ற பாடல், இன்றும் தென்கலை வைணவர்களின்ன திருமணத்தின்போது தவறாமல் பாடப்படுகிறது.
- இறைவனுக்கும் ஆன்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் (அ) ஸ்ரீரங்கம்
- பாவை என்பதன் இலக்கணக்குறிப்பு இருமடி ஆகுபெயர்.
- “அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி” எனக் கொண்டாடப்படுபவர் – ஆண்டாள்.
7.தொண்டரடி பொடியாழ்வார்
- பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
- பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
- பாடிய பாடல் : 55
- வேறு பெயர் : விப்பிர நாராயணர்
- சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்
- ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டார்.
- இயற்பெயர் – விப்ரநாராயணர்.
- இயற்றிய நூல்கள் – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறைதிருமலை திருப்புகழ்ச்சி
- “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை வலியுறுத்தினார்.
8.திருமங்கையாழ்வார்
- பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
- தந்தை : ஆலிநாடுடையார்
- தாய் : வல்லித்திரு அம்மையார்
- பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
- பாடிய பாடல் : 1253
- சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில்திளைத்தவர்.
- இவரின் திருவெழுங்கூற்றறிக்கை, சொல்லணியில் அமைத்துப்பாடப்பட்ட நூலாகும்.மடல் எனும் சிற்றிலக்கிய வகையைத்தொடங்கியவர்.திருடனாக இருந்து ஆழ்வாராக மாறியவர்.
- மனைவி – குமுதவல்லி
- வயலாலி மணவாளனிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.
- பெரியபெருமாள்(ஸ்ரீரங்கம்) சந்நிதியில் திருப்பணி செய்தவர்.
- இவர் எழுதியவை – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
- திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய, பெரிய திருமடல், என்ற ஆறு பிரபந்தங்கள்(இவை
- ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு அங்கங்கள்” என கூறப்படுகின்றன)
- திருவரங்க கோவிலின் சுற்றுசுவர் கட்டியவர் . சைவ நெறியிலும் ஈடுபாடு கொண்டவர்
- மன்னுமலை அரையன் பொற்பாவை என்ற சிவன் பாடலைப் பாடியுள்ளார்
9.திருப்பாணாழ்வார்
- பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
- பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு,
- எழுதிய நூல் : அமலனாதிபிரான்
- பாடிய பாடல் : 10
- சிறப்பு : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்
- அந்தணனது நெற்பயிர்கதிரில் பிறந்ததால் முதலாழ்வார்களை போல ‘அயோனிஜர்” எனப்பட்டார்.
- இவர் ஒரு கானஞானி. இவரை ஸோகஸாரங்கமாமுனிகள் தோளில் ஏற்றி ஸ்ரீரங்கம்
- பெருமாள் முன்விட்டார்.
- இவர் ‘அமலான் ஆதிப்பிரான்” எனும் பாசுரம் பாடி இறைவனோடு ஐக்கியமானார்.
- இவர் பாடல் பெரும்பாலும் அரங்கநாதனைப் பற்றியதாகும்
- இறைவன் முன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது இவரின் கோட்பாடு.
10.குலசேகர ஆழ்வார்
- பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
- பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு,
- தந்தை : திட விரதன்
- எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
- பாடிய பாடல் : 105
- இவர் சேரமன்னர் மரபில் வந்த ஆழ்வார்.
- திருவாஞ்சிக்களத்தில் , கி.பி9 – ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- இவர் கௌத்துவமணியின் அம்சமாக பிறந்தவர்.
- நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல்கள் முதல் ஆயிரத்தில் உள்ளது.
- இவர் இயற்றிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக்கொண்டது.
- இவர் திருவரங்கத்தில், 3வது மதிலைக்கட்டியதால், அவ்வீதிக்கு குலசேகரன் வீதி எனப்பெயர் உண்டாயிற்று .
- இவரின் மிகப்பெரிய தாலாட்டுப்பாடலாக இப்போது கிடைத்திருப்பது மண்ணுப்புகழ் என்ற பத்துப்பாட்டு .
- மலையில் ஏதேனும் ஒரு பொருளாக இருக்க விரும்பியவர்
11.நம்மாழ்வார்
- பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
- தந்தை : காரி
- தாய் : உடையநங்கை
- பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி,
- எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
- பாடல்கள் : 1296
- சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்
- பிறப்பு -18 திருப்பதிகளையுடைய பாண்டிநாட்டில் தாமிரபரணி கரையில் ஆழ்வார்திருநகரியில் (திருக்குருகூர்)
- நட்சத்திரம் – வைகாசி விசாகம்
- அம்சம் – திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், ஸ்ரீகௌஸ்துபம் எனும் இரத்தினாம்சமும், ஸேனை முதலியோரது அம்சம்
- சிறப்புப் பெயர்கள் – மாறன் , சடகோபன் , பராங்குசன் , வகுளபூஷணன்
- இவர் பாடிய பாசுரங்களை நான்காவது ஆயிரம் என்பர்
- இவர் பாடிய மொத்த பாசுரங்கள் – 1296
- உலகப் பற்றினை விட்டு இறைவனை சரண் அடையதால் அனைத்தும் பெறுவது எளியது என்றார்
- “வீடுமின் முற்றவும் , வீடு செய்து உம்முயிர் என்ற பாடலைப் பாடியுள்ளார்
- சடம் எனும் வாயுவை ஓட்டி ஒழித்ததினால் ‘சடகோபன்” என பெயர் பெற்றார்.
- இவர் 16 வயது வரை மௌனமாய் இருந்தார். ஸேனை முதலியார் இவருக்கு திருவிலச்சினை செய்து, உபதேசம் செய்து வைஷ்ணவராக்கினார்.
- இவர் எழுதிய நூல்கள் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்நான்கும் ‘நான்கு வேதங்கள்” எனப்படுகின்றன.
- ‘பொய்யில்பாடல்” என அழைக்கப்படுவது – திருவாய்மொழி.
- ‘மாறி மாறி பல பிறப்பும் பிறந்து” – திருவாய்மொழி
- இவர் அவதரிக்கும்போதே இறைவனிடம் பேரன்பு கொண்டதால் இவர் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியை ‘ஸஹஜபக்தி” எனக் கூறுவர்.
- இஷ்டதெய்வம் – கிருஷ்ணன்.
- இவர் ‘கிருஷ்ணத்ருஷ்ணாதத்வம்” என்று கொண்டாடப்பட்டவர்.
- ‘ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவர்” எனப் போற்றப்படுபவர் – நம்மாழ்வார்.
12.மதுரகவி ஆழ்வார்
- பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
- பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி,
- எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி
- பாடல்கள் : 96
- சிறப்பு : ஆழ்வாராயிருந்து இன்னொரு ஆழ்வாரைப் பாடிய பேறு பெற்றவர், நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர்.
- ஆழ்வார்கள் - வேறுபெயர்கள்
- திருமழிசையாழ்வார் - சக்கரத்தாழ்வாழ்வார், பக்திசாகரர் திராவிட ஆச்சாரியார்
- பெரியாழ்வார் -விஷ்னுசித்தர், பட்டர்கிராம் வேயர்கோண்
- ஆன்டாள் -சூடிக்கொடுத்த சுடர்கொடி வைணவம் தந்த செல்வி நாச்சியார்
- நம்மாழ்வார் -சடகோபன், பராங்குசன் , தமிழ்வேதம் செய்த மாறன், குருகைக்காவலன்
- திருமங்கையாழ்வார் -கலியன், கலிநாடன், அருள்மாரி, மங்கையர்கோன், மங்கையர்வேந்தன்
- தொண்டரடி பொடியாழ்வார் - விப்பி நாராயணன்
- குலசேகர ஆழ்வார் - கொல்லிக்காவலன் , கூடல்நாயகன்ன, கோழிக்கோ
TNPSC EXAMS KEY POINTS -NALLAIRA THIVYA PRAPANTHAM
- வைணவ கடவுளைப் போற்றி பாடுவது மங்களா சாசனம் செய்தல் எனப்படும்.
- மங்களா சாசனம் பாடியவர்கள் ஆழ்வார்கள்.
- இறைவனின் திருவடியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்படுவர். ஆழ்வார் பன்னிருவரால் இயற்றப்பட்டது நாலாயிர திவ்விய பிரபந்தம்,
- நாலாயிரதிவ்விய பிரபந்தத்தில் 105 பாசுரங்கள் உள்ளன.
- நூலாயிர திவ்ய பிரபந்தம் 3776 பாடல்களை கொண்டது. நாலாயிரதிவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர்- நாதமுனிகள் ஆவார்.
- ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை உரை எழுதியுள்ளார்.
- தேனினும் இனி தீந்தமிழ் பனுவல் என்றழைக்கப்படும் நூல் நாலாயிர திவ்வியபிரபந்தம்.
- ஆழ்வார்கள் 12 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்வியபிரபந்தம் ஆகும்.
- அருந்தமிழ் பனுவல் என அழைக்கப்படுவது நாலயிர திவ்விய பிரபந்தம், * ஆழ்வார் என்ற சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவை கருவியாக உடையவர் என்று பொருள்.
- நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ள மொத்த நுால்கள் 24.
- திருமாலின் ஐம்படைகள் 1) சக்கரம் (சுதர்னம்) 2) வில் (சாரங்கம்) 3) வாள் (ருந்தகம்) 4) தண்டு (கௌமோதகி) 5) சங்கு (பாஞ்ச சன்னியம்).
- திருமாலின் வாகனம் கருடன், திருமாலின் தொண்டன் அனுமன்.
- திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடியவர் மதுர கவியாழ்வார். * பெண்ணாகிய ஆண்டாளையும், திருமாலைப் பாடாத மதுரகவியாழ்வாரையம் நீக்கி ஆழ்வார் மொத்தம் 10 பேர் என்றும் கூறுவர்.
- பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுவர்.
- சைவ சமயத்தின் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.