TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.09.2023:
- சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது :கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக (Best Tourist Village) நீலகிரி மாவட்டத்தின் கேத்தி பள்ளத்தாக்கிலுள்ளள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது.கூகுளை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகிய இருவரால் கடந்த 1998-ல் இதேநாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது படுபயங்கர வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- தில்லியில் இந்தோ-பசுபிக் பிராந்திய தலைமை தளபதிகளின் 13வது மாநாடானது நடைபெற்றது.
- ஆஸ்கருக்கு தேர்வானது டோவினோ தாமஸின் -2018 :கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.இந்நிலையில், இப்படத்தை அதிகாரப்பூர்வமாக இந்தியா சார்பில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
- அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி மையத்தால் 2016-ல் பென்னு சிறுகோள் (Bennu Asteroid) அனுப்பப்பட்ட ஓசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலமானது கல், மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்துள்ளது.இவ்வெண்கலமானது 2018-ல் இச்சிறுகோளை அடைந்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.( அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் 1999-ல் லைனியர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட சிறுகோளே பென்னு சிறுகோள் ஆகும்.இச்சிறுகோள் பூமியிலிருந்து 200கோடி கி.மீ தூரத்திலும், நீரை விட 30% அடர்த்தியையும் கொண்டுள்ளது.6 ஆண்டுக்கு ஒரு முறை பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.முதன் முதலிலாக 1999RQ36 என்று பெயரிடப்பட்டது.)
- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற 17வது ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார்.
- ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான விஷ்ணு சரவணன் 34 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 27
உலக சுற்றுலா தினம் :உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.கருப்பொருள்: “Tourism and Green Investment”
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment