Tuesday, September 26, 2023

சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா -TNPSC HISTORY NOTES IN TAMIL

சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா
சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா


சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா

ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.1856 ஆம் ஆண்டு - பஞ்சாப் ராவி1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.

காலம்

சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு.3300 முதல் கி.மு.1900 வரை என கருதப்படுகிறது

சிந்து சமவெளி நாகரிக காலம் பொதுவாக மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

  • ஆரம்ப நிலை கி.மு.3300 - கி.மு.2600
  • முதிர்வு நிலை கி.மு.2600 - கி.மு.1900
  • பிந்தைய நிலை கி.மு.1900 - கி.மு.1700


அறிஞர்களின் கருத்துப்படி

அறிஞர்கள்                                  காலம்

சர்ஜான் மார்ஷல் (1921) - கிமு.3250 முதல் கி.மு. 2750 வரை

போர்சர்வ்ஸ் (1956) - கிமு.2000 முதல் கி.மு. 1500 வரை

டி.பி.அகர்வால் (1964) - கிமு.2300 முதல் கி.மு. 1750 வரை

  • சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நகரம் ஹரப்பா ஆகும். இதன் காரணமாவே இந்நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கபடுகிறது.
  • ஹரப்பா, மொகங்சதரோ மற்றும் பிற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் இந்தியாவில் கி.மு.3000 ஆம் ஆண்டில் நன்கு வளர்ச்சியடைந்த நாகரிகம் இருந்தது என்பதை உணர்த்துகிறது
  • நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தின் மொழி வார்த்தையான சிவிஸ் (Civis) என்ற சொல்லிருந்து வந்தது

நகர அமைப்பு

நகரின் வட பகுதி குறுகலாகவும், உயரமாகவும் இருந்தது பாதுகாப்பிற்கான கட்டமைப்பு.கிழக்கு பகுதி விரிந்தும் தாழ்ந்தும் இருந்தது.அகன்ற சாலைகள் - வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல், மாடிவீடுகள் வரைக் காணப்படுகின்றன.வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருந்தன.சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன.ஒவ்வொரு வீட்டிலும் கிணறும் குளியல் அறையும் இருந்தன.

1. மேல் பகுதி கோட்டை மேட்டு பகுதி சிட்டாடல் என்று அழைக்கபடுகிறது. களிமண் குன்றுகள் மீது வசதி மிக்கவர்கள், வணிகர்கள் வாழ்ந்திருக்கலாம்.

2. தாழ் பகுதி அல்லது லோயர் டவுன் பகுதிகளில் சாதாரண மக்கள் வாழ்ந்திருக்கலாம்.

நகரங்களில் உள்ள தெருக்கள் நேராக, அகலமாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. தெருக்கள் ஒன்றை ஒன்று செங்குத்தாக வெட்டிகொள்கின்றன. தெருக்கள் முனைகளில் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. தெருக்கள் அமைப்பு சட்டக அமைப்பை போன்று காணபடுகின்றன

பெருங்குளியல் குளம்

  • மொகன்ஜதரோ பெருங்குளியல் குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • 8 அடி ஆழம், 23 அடி அகலம், 39 அடி நீளம் கொண்ட செவ்வக வடிவில் அமைந்துள்ளது. 
  • பெருங்குளியல் குளம் நான்கு பக்கமும் பாதை கொண்டதாக உள்ளது. 
  • நான்கு பக்கமும் நடைபாதை உள்ளது. நான்கு பக்கமும் படிக்கட்டுகள் உள்ளது. உடை மாற்றும் அறைகள் உள்ளது. 
  • அருகில் ஒரு பெரிய கிணறு உள்ளது. இக்கிணற்றிலிருந்து குழாய் மூலம் பெருங்குளியல் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லபடுகிறது. குளத்திலிருந்து தண்ணிரை வெளியேற்ற தனியே குழாய்கள் உள்ளன.

தானியகிடங்குகள்

  • ஹரப்பாவில் 6 தானிய கிடங்குகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இங்கு கோதுமை மற்றும் பார்லி சேமித்து வைக்கபட்டிருகலாம். 
  • மொகஞ்சதரோவில் இரண்டு பெரிய தானியக்களஞ்சியங்கள் உள்ளன. ராக்கிஹர்கியில்(ஹரியானா) ஒரு பெரிய தானிய கிடங்கு கண்டுபிடிக்கபட்டுள்ளது.

பெருங்கூட்ட அரங்கு

  • பெருங்கூட்ட அரங்கு மொகன்ஜதரோவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 20 தூண்கள் நான்கு வரிசைகளில் அமையபெற்ற கூட்ட அரங்கு உள்ளது.

கப்பல் கட்டும் தளம்

  • லோத்தலில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

கழிவு நீர்

  • கழிவு நீர், பாதாள சாக்கடை.கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது.திறந்து பழுது பார்க்கும் வசதிவீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

வாழ்க்கை முறை

  • நகராட்சி நிருவாகம்
  • கடல் வணிகம்வணிகத் தொடர்பு: மெசபடோமிய, எகிப்து, சுமேரியா, ஈராக்
  • தெரியாத விலங்கு: குதிரை. 
  • தெரியாத உலோகம்: இரும்பு.ஒருவகை திண்மையன கற்களால் ஆன எடைக் கற்கள்.
  • முக்கிய உணவு: கோதுமை, 
  • பார்லிபருத்தியின் இழை ஆடைக்காக முதன் முதல் பயன் படுத்தப்பட்டது இந் நாகரீகத்தில் தான்.
  • காளை மாட்டைப் புனிதமாகப் போற்றினர்.
  • வெள்ளியை இறக்குமதி செய்தனர்.
  • நெசவாளர்கள் கைத்தொழில், உலோக தொழில்பருத்தி கம்பளி நெய்தனர்.
  • வேட்டி - கீழ் ஆடை 
  • சால்வை - மேல் ஆடை 

எழுத்து முறை

  • வலமிடருந்து இடமாகவும், மற்றும் வலமிருந்து இடம், தொடர்ந்து இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன."சிந்துசமவெளி மொழி பண்டைய தமிழ் வடிவமே" - ஹிராஸ் பாதிரியார்.தொல் தமிழ் எழுத்துடன் தொடர்பு

சுடுமண் முத்திரை

  • சுடுமண் (Terracotta) முத்திரைகளும் சுடுமண் உருவ பொம்மைகளும்முத்திரைகளின் வடிவம் செவ்வகம். - 100+சித்திர வடிவான எழுத்துகள் அதில் உள்ளன.டெர்ரெர் கோட்டா - சுடுமண் பாண்டம்பறவை விலங்கு ஆண் பெண் உருவம்காளை , வண்டி, புறா, படகு , யோக நிலையில் ஒருவர் அமர்ந்துள்ள உருவம்.

சிற்பம் & சமயம்

  • வெண்கல நாட்டிய மங்கை சிலை - மொகஞ்சதாரோதாடியுடன் கூடிய ஒருவரின் சுண்ணாம்பு கல் சிலைவணங்கியவை - பசுபதி என்ற சிவன் , பெண் கடவுள் லிங்கம் சூலம், மரம்இறந்தவர்களை தாழிகளிலிட்டு புதைத்தல் - அவர்களின் அணிகலன் சேர்த்துசக்கரத்தை பயன்படுத்தி சட்டி பானை - பளபளப்பான வண்ணம் பூசப்பட்டு உள்ளன

பொருளாதாரம்

  • சிந்து சமவெளி மக்களின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்ததாக உள்ளது.
  • கோதுமை, பார்லி, திணை, அவரை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். லோத்தல் நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கபடுகிறது. பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
  • ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்யும் இரு பயிரிடல் முறையை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக நவம்பர் மாதம் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். உழவுக்கு கலப்பையை பயன் படுத்தியுள்ளனர். 
  • நீர் பாசனம் சிறப்பாக இருந்துள்ளது. ஆறுகளில் இருந்து கால்வாய் வெட்டி நீர் பாசனம் செய்துள்ளனர். கிணற்று பாசனம் இருந்ததற்காண சான்றுகள் உள்ளன. 
  • தானியங்களை தானிய கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளனர். சிந்து சமவெளி மக்கள் வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் காளிபங்கனில் கிடைக்கபெற்றன. உழுத வயல்கள் இருந்ததற்கான சான்றுகள் இங்கு கிடைக்கபெற்றுள்ளன.
  • கால்நடை வளர்த்தல் ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்கப்படுள்ளன. மாடுகள் செபு என்று அழைக்கப்பட்டுள்ளன. பன்றி, யானை, எருமை போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். குதிரை பற்றி இம்மக்கள் அறிந்திருக்கவில்லை. வெண்கலத்தை பயன்படுத்தியுள்ளனர். இறைச்சி, மீன் போன்றவற்றை உணவுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஒட்டகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
  • நாணயங்கள் இல்லை. பண்டமாற்று முறை நடைமுறையில் நடை பெற்றுள்ளது. எடையை அளவிட படிக கற்கள் பயன்படுத்தபட்டுள்ளது. படிக கற்கள் கண சதுர வடிவம் கொண்டதாக உள்ளது. இதன் அளவுகள் 1:2:4:8:16:32 என இருமடங்கு முறையை பின்பற்றியிருகிறார்கள். இதில் 1 என்பது 13.63 கிராம் என்ற எடையை கொண்டதாக உள்ளது. நீளம் 1 அளவானது 1.75 செ.மீ நீளம் கொண்டதாக உள்ளது. 
  • தந்தத்தினாலான அளவீடுகளையும் பயன்படுத்தியுள்ளனர். சிந்து சமவெளி நாகரிக மக்கள் மிக குறைந்த அளவுகளையும் அளக்க கூடிய அளவிற்கு எடை கற்களையும் அளவீடுகளையும் கொண்டவர்கள்ளக உள்ளனர்.

பயன்பாட்டு அறிவியல்

கட்டிட தொழில் , நிலம் தேறுதல்மனை அளவீடு ..வடிவ கணித அமைப்புதொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன

அழிவுக்கானக் காரணங்கள்

  • பெரும் தீ , 
  • உள்நாட்டு போர் 
  • சிந்து வெள்ள பேருக்கு
  • ஆரியர்களின் வருகை. படையெடுப்பு

அகழ்வாய்வு

  • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லஸ் மேசன் 1826-ல் ஹரப்பாவில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார். ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன் முதலில் சார்லஸ் மேசன் என்பவர் தனது நூலில் விவரித்தார்.
  • 1831-ல் அலெக்ஸாண்டர் பர்னஸ் என்பவர் ஆம்ரி என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.
  • அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பா மற்றும் மொகங்சதரோ பகுதிகளில் 1853, 1856, 1875 ஆண்டுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
  • 1856 இல் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதிக்கரையின் கிளை நதியான ராவி நதிக்கரையில் லாகூரில் இருந்து முல்தானுக்கு இருப்புப்பாதை அமைக்க தோண்டப்பட்டபோது சுட்ட செங்கற்களும், கட்டிட இடிபாடுகளும் கண்டறியப்பட்டது.
  • 1920 களில் சர் ஜான் மார்ஷல் என்பவர் ஹரப்பா பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்
  • ஹரப்பாவில் 1921 ல் தயாராம் சஹானி என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார்.
  • மொகங்சதரோவில் 1922 ல் R.D.பானர்ஜி என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார்.
  • 1940 களில் மோர்டிமர் வீலர் என்பவர் ஹரப்பா பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.
  • லோத்தலில் 1957 ல் S.R.ராவ் என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார். இந்தியாவின் குஜராத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.
  • B.B.லால் என்பவர் காளிபங்கனில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.

ஹரப்பா கால முக்கிய நகரங்கள்:

  1. சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
  2. சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு திட்டமிட்ட நகர அமைப்பு
  3. சிந்து சமவெளி நாகரிகத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட நகரம் ஹரப்பா. புதையுண்ட நகரம் எனவும் அழைக்கபடுகிறது. பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
  4. மொகங்சதரோ பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் சிந்து நதிகரையில் அமைந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் பெரிய நகரம் - மொகஞ்சதாரோ (200 ஹெக்டர்). மொகஞ்சதரோ என்பதன் பொருள் இறந்தவர்களின் மேடு அல்லது இறந்தவர்களின் நகரம்.
  5. லோத்தல் ஒரு துறைமுக நகரமாகும். இது குஜராத்தின் போக்வா நதிக்கரையில் உள்ளது.
  6. காலிபங்கன் ராஜஸ்தானின் காஹர் நதிக்கரையில் அமைந்துள்ளது.
  7. தோலவிரா நகரத்தைக் கண்டறிந்தவர்கள் ஜோஷி மற்றும் பிஷ்ட்
முக்கிய நகரங்கள்

  • ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்
  • மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்
  • டோலாவிரா - குஜராத், இந்தியா
  • காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா
  • லோத்தல் - குஜராத், இந்தியா
  • பனாவலி - ராஜஸ்தான், இந்தியா
  • ராக்கிகார்ஹி - ஹரியானா, இந்தியா
  • சர்கோட்டடா - குஜராத், இந்தியா


TNPSC KEY POINT NOTES -INDUS VALLEY CIVILIZATION 

 சிந்துவெளி நாகரிகம்

1. சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921

2. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா

3. ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் சப்த சிந்து

4. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை - அலெக்ஸாண்டர் கன்னிங்காம்.

5. இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம்-சிந்து சமவெளிநாகரிகம் 

6. சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் - இரும்பு

7. சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை

8. சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு pictograph என்று பெயர்.

9. எழுதும் முறை வலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவும் எழுதினர்.

10, உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான்பருத்தி முதன் முதலாகப்

பயிரிடப்பட்டது.பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.

11. சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினர் 12. சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய சுடுமண் பயன்படுத்தினர்

13, சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு -குதிரை

14. சிந்து சமவெளி முத்திரைகள் 10 வகையான வடிவங்களில் கிடைத்துள்ளன.

15. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மிகவும் பெரிதாக எழுதப்பட்டுள்ள எழுத்தின் நீளம் 37 செ.மீ.

16.ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம் - 400 மைல் 17.மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.

18. இசை, நடனம், கோழிச் சண்டை, காளைச் சண்டை போன்றவை நடைபெற்றது

19.சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன.

20, மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள் துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

21. குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.

 ஹரப்பா நாகரிகம்:

1. ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.3250 -கி.மு 2750 

2. ஹரப்பா ராவி நதிக்கரையின் மேல் மாண்ட்கோமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3. ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர் - ராய் பகதூர் தயாராம் சஹானி(1921)

4. ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம் 

5. ஹரப்பா என்ற சொல்லின் பொருள் புதையூண்ட நகரம்

6. ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் நகர நாகரிகம்

7. ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)

8. டெரக்கோட்டா என்பது - சுடு மண்பாண்டம் 

9. இதில் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் உள்ளன.இது 71மீ நீளமும் 15.23மீ அகலமும் கொண்டது.

10. இம்மக்கள் எருதுகளை வணங்கினர்.பருத்தி பயிரிட்டனர்.

11.16 மற்றும் அதன் மடங்குகளைப் பயன்படுத்தினர். 

12. ஹரப்பா பண்பாட்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு முத்திரைகள் ஆகும்.

13.முத்திரைகளில் காளையின் உருவங்களும் பிறவிலங்குகளின் உருவங்களும் காணப்படுகின்றன. வியாபாரதிற்கு இவர்கள் முத்திரைகளை பயன்படுத்தினார்.

14. முக்கிய உணவு - கோதுமை, பார்லி 15. ஹரப்பாவில் வெண்கல அளவு கோல் கண்டறியப்பட்டுள்ளது.

 மொகஞ்சதாரோ நாகரிகம்:

1. மொகஞ்சதாரோவை கண்டுபிடித்தவர் - பானார்ஜி(1922)

2. மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு 

3.சிறப்பான கழிவுநீர் வெளியேற்ற வசதி உள்ளது.

4. கால்வாய்கள் சுண்ணாம்புக் கலவை, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

5. மொகஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் ஒன்று உள்ளது.இது 11.8மீ நீளமும், 7.01மீ அகலமும் 2.4மீ ஆழமும் கொண்டது.

6. ஆடை மாற்றும் அறை காணப்பட்டது. இக்குளத்தில் நீர்வர செங்கல்லானா குழாய்கள் உள்ளன. நீருக்குள் செல்ல அகலமான படிக்கட்டுகள் இருந்தன..

7. நகரங்கள் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

8. மேல்பகுதி (அல்லது) சிட்டாடல் மற்றும் கீழ்பகுதி.

9. மேல்பகுதியில் - பொதுக் கட்டிடங்கள், தானியக் கிடங்குகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமயக் கட்டிடங்கள் உள்ளன.

10.கீழ்பகுதி மக்கள் வாழ்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

11.கோதுமை, பார்லி, கேழ்வரகு, பட்டாணி, எள், கடுகு, அரிசி(லோத்தல்), பருத்தி,பேரீச்சம்பழம்.தர்பூசணி மற்றும் பிற பயிரிடப்பட்டன. 

12. மரத்தாலான கலப்பைகள் பயன்படுத்தபட்டன.

13.ஆயுதங்கள் பெரும்பாலும் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டன.

14. வெண்கலத்தை உருவாக்க ராஜஸ்தானில் கேத்ரி மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றில் தாமிரமும், ஆப்கானிஸ்தானிலிருந்து தகரம் பெறப்பட்டன.

15. ஆடைகளில் அதிகமாக ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் தாமிரம்) பயன்படுத்தப்பட்டன.

16. மண்பாண்டம் செய்யும் சக்கரம் பயன்பாட்டிலிருந்தது. 

17. மண்பாண்டங்கள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலிருந்தன.

18. தாயக்கட்டை விளையாட்டு விளையாடினர்.

19.மொஹஞ்சதாரோவில் நடனமாடும் மங்கையின் வெண்கல உருவம் கண்டெடுக்கப்பட்டது. 

20. அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள் இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன.

21. அன்றைய கால முத்திரைகளிலும், ஒவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது.

22, ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன.

23, ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப்பொருளானது.

24.வீட்டுக் காவலுக்கு நாய்கள்.தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள் வளர்க்கப்பட்டன.

25. முக்கிய உணவுகள்: கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் 

26. முக்கியத் தொழில்கள் விவசாயம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல்

27. எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன.

28. இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 

29. உயர்மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.

30.மொஹஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்டட அமைப்பு - தானியக் களஞ்சியம்.இது 150 அடிநீளமும், 50 அடி அகலமும் கொண்டது. 31. சமூகக் கூடமும் மாடிக்கட்டிடமும் காணப்பட்டன.

 காளிபங்கன்:

  1. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
  2. காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையில் (காக்கரா) மீது அமைந்துள்ளது. உழவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டது

 லோத்தல்:

  1. எஸ்.ஆர்.ராவ் என்பவரால் 1957-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாநிலத்தில் உள்ளது.
  3. சிந்து சமவெளி நாகரிகத்தின் வாணிகத் துறைமுக நகரம்.இது பாக்குவார் நதிக்கரையின் மீது அமைந்துள்ளது
  4. இது வெளிநாட்டுடன் தொடர்புடையது.
  5. இது மனிதனால் உருவாக்கப்பட்டது. இந்நாகரிகம் ஆரியர் வருகை அல்லது ஆற்று வெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும்.

 ரூப்பர்:

  1. இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
  2. ஹரப்பா அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.
  3. 1953-ல் ஒய்.டி.சர்மா என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.
  4. திட்டமிட்ட நகர அமைப்பைக் கொண்டது.பெரிய பகுதிகள் சாலைகளால் அமைக்கப்பட்டன.குறிப்பிட்ட இடைவெளிகளில் காணப்பட்ட தெருவிளக்குத் தூண்கள் தெருவிளக்கு அமைப்பைக் காட்டுகின்றன.


 

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: