TODAY CURRENT AFFAIRS IN TAMIL 19.09.2023

TNPSC PAYILAGAM
By -
0


   TODAY CURRENT AFFAIRS IN TAMIL 19.09.2023:

  1. பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று 19.08.2023 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற முதல் அமர்விலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று தாக்கல் செய்தார்.MONSOON SESSION OF PARLIAMENT 2023 BILLS / நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் 2023 -31 மசோதாக்கள்
  2. பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு ‘சம்விதான் சதன்’ எனப் பெயரிடப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.‘சம்விதான் சதன்’ என்பது ‘அரசியலமைப்பு அவை’ என்று தமிழில் பொருள். 
  3. யுனஸ்கோ பாரம்பரிய தல பட்டியலில் கர்நாடகத்தின் ஹொய்சாளர்களின் புனித குழுமத்தின மூன்று கோவில்கள் இடம் பிடித்ததுள்ளன. இதன் மூலம் இந்தியா யுனஸ்கோ பராம்பரிய தலப்பட்டியல் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.1. சென்னகேசவ கோயில்-வேலூர்,2. கேசவா கோயில்-சோமநாப்பூர்,3. ஹெய்சலேஷ்வரா கோயில்-ஹலேபிடு-இந்தியாவில் உள்ள 41 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்:
  4. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் 8,733 பகுதிகளில் கொசுக்கள், லாா்வாக்கள் சேகரிக்கப்பட்டு, பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அவற்றில் 283 இடங்களில் டெங்கு காய்ச்சலைப் பரப்பக் கூடிய கொசுக்கள் உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் 14,212 இடங்களில் இருந்து கொசுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் 579 பகுதிகளில் டெங்கு கொசுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது
  5. 21வது வருணா கூட்டு பயிற்சியை இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் அரபிக்கடலில் நடத்தியுள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்பயிற்சிக்கு 2001-ல் வருணா என பெயர் இடப்பட்டது.LIST OF MILITARY EXERCISES OF INDIA 2023 / இந்திய இராணுவப் பயிற்சிகளின் பட்டியல் 2023
  6. சந்தேஸ் செயலி (Sandes App)- Sandes App தேசிய தகவல் மையமானது பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்புகளை மேற்கொள்ள டெல்லி காவல் துறைக்காக 2020-ம் ஆண்டு உருவாக்கியுள்ளது.
  7. நிலம் வாங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் புதிய நிலம் வாங்குவதற்கான புதிய இ-பூமி போர்ட்டலை (New E-Bhoomi Portal) தொடங்கி வைத்துள்ளார்-IMPORTANT APPS LAUNCHED BY GOVERNMENT IN 2023 / அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023
  8. 2009 முதல் அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்று வரும் கருடா ஷீல்டு (Garuda Shield) என்ற பன்னாட்டு விமானப் பயிற்சியானது இந்தோனேசியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தோனேசியா நாடுகள் பங்கேற்றுள்ளன.
  9. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ள ஹாக்கி தரவரிசை பட்டியலில் ஆடவர் பிரிவல் இந்திய ஹாக்கி அணியாது 3வது இடத்தை பிடித்துள்ளது முதல் இடத்தை நெதர்லாந்தும், இரண்டாம் இடத்தை பெல்ஜியமும் பிடித்துள்ளன. இந்திய மகளிர் ஹாக்கி அணியானது 7வது இடம் பிடித்துள்ளது.
  10. சிங்கப்பூர் பார்முலா 1 கார் பந்தயத்தில் (Singapore Formula 1 car race) பெராரி நாட்டை சேர்ந்த கார்லோஸ் செய்ன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். மெர்சிடிஸ் நாட்டின் லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
  11. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ நிர்வாகம் வழங்கி வருகின்றது. கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் இலவசமாக விஐபி இருக்கையில் அமர்ந்து காணலாம்.முதலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.
  12. இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு :கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக மத்திய வெளியுறவுத் துறை சம்மன் வழங்கியிருந்தது.இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான கேமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
  13. நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற இணையவழி குற்றங்கள் தொடா்பாக கான்பூா் ஐஐடி நிா்வகிக்கும் லாப நோக்கமில்லாத ஸ்டாா்ட்-அப் நிறுவனமான ‘ஃபியூச்சா் கிரைம் ரிசா்ச் ஃபவுண்டேஷன் (எஃப்சிஆா்எஃப்)’ ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகளை ‘இந்தியாவைப் பாதிக்கும் இணையவழி குற்றங்கள்’ என்னும் தலைப்பில் ஐஐடி கான்பூா் அண்மையில் வெளியிட்டது. ஆய்வு மேற்கொண்ட காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற இணையவழி குற்றங்களில் நிதி மோசடிகள் 77.41 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் யுபிஐ, இணையவழி வங்கிச் சேவை உள்ளிட்டவை தொடா்பாக மட்டும் 47.25 சதவீத குற்றங்கள் நடந்துள்ளன.

IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 19 

கடற்கொள்ளையர் தினம் போன்ற சர்வதேச பேச்சு : கடற்கொள்ளையர் போன்ற சர்வதேச பேச்சு ஆண்டுதோறும் செப்டம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது. பழைய கடல் கொள்ளையர்களைப் போல பேசுவதற்கும் ஆடை அணிவதற்கும் இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!