TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.09.2023:
- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இனப்பெண்ணான ஜெயஸ்ரீ இந்திய அளவிலான பைலட் தேர்வில் வெற்றி பெற்று படுகர் இனத்தின் முதல் பெண் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.-தமிழ்நாட்டின் முதன்மைகள்
- தமிழகததில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 28,102 பேர் புதிய தொழில் முனைவோராகி பயனடைந்துள்ளன. இத்திட்டத்தில் ரூ.770 கோடி மானியத்துடன் ரூ.2,134 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு 35% மானியத்துடன் கடனுதவி வழங்க தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
- புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், தானிய வகைகளை சேமித்து வைக்க ரூ.7.20 கோடி மதிப்பீட்டில் 3 தானியக் கிடங்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
- வீரா வாகன திட்டம் (VEERA): தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க வீரா வாகன சேவையனாது தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முன்னோடி திட்டமாக விளங்குகிறது. VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents ஹூண்டாய் குளோவில் மற்றம் இசுசூ மோட்டார் நிறுவனங்கள் இணைந்து இவ்வாகனத்தை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது-வாகன திட்டம் (VEERA SCHEME) 2023
- பனை ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ள தூத்துக்குடியிலுள்ள கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியின் பெயரை வ.உ.சிதம்பரனார் நினைவாக வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வி.அருண்ராய் தமிழக அரசின் தொழிற்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேசிய குற்ற ஆவணக் காப்பக பதக்கம் : தமிழக காவல் துறையால் ரெளடிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் டிராக் கேடி செயலிக்கு (Track KD) தேசிய குற்ற ஆவணக் காப்பக பதக்கம் கிடைத்துள்ளது. டிராக் கேடி செயலி 25.12.2022 அன்று உருவாக்கப்பட்டது.TNPSC UNIT II: நடப்பு விவகாரங்கள் விருதுகள் கௌரவங்கள் 2023
- இந்தோனிசியா ஜகர்தாவில் 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாட்டில் இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவினை மேம்படுத்த பிரதமர் மோடி 12 அம்ச திட்டங்களை வெளியிட்டுள்ளார்.20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு 2023
- தில்லியில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டில் ஒருமனதுடன் கூட்டறிக்கை வெளியிட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்-ஜி 20 இந்தியா 2023 உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்
- ஜி20 உச்சி மாநாட்டில், ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கும் நடைமுறை நிறைவு பெற்று, ஜி20 அமைப்பில் 21வது நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி கரோனா தொற்றிலிருந்து உருமாற்றமடைந்த இரு வேறு புதிய தீநுண்மிகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை சா்வதேச லான்செட் இதழ் வெளியிட்டுள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 9
தாக்குதலிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் (International Day to Protect Education From Attack) :2020 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒருமித்த முடிவால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பாகும்.இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆயுத மோதல்களின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், இராணுவ நோக்கங்களுக்காக பாடசாலைகளைப் பயன்படுத்துதல், அத்துடன் கல்விக்கான உரிமையை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான பாடசாலைகள் பிரகடனம் உட்பட ஆயுத மோதலில் கல்வியைத் தொடர்வதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் குறித்து இந்த நாள் கவனத்தை ஈர்க்கிறது.
உலக முதலுதவி தினம் (World First Aid Day):செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகின்றது. இத்தினம் இரண்டாயிரத்தில் சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு,மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. இது நெருக்கடி நிலைமையில் உயிரை காப்பாற்றுவதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.கருப்பொருள்: “First Aid in the Digital World”