22nd August : சென்னை தினம்/ Chennai Day
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.08.2023
- சென்னை நாளையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற இடங்களைக் குறிப்பிடும் கருப்பு- வெள்ளை படங்கள் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சி சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளி மாணவர்களின் 'அக்கம் பக்கம்' என்ற இந்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். சென்னை தினம்/ Chennai Day
- 21.08.2023-ல் தமிழக அரசின் சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்கும் திட்டமான முதல்வரின் பசுமை நல்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாள்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக ரூ.10 கோடி வழங்கி, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
- பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி மாநாடு இதுவாகும்.
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கியுள்ள க்வாட் நாடுகள் பங்கேற்கும் கடற்படை பயிற்சியானது மலபார் என்னும் பெயரில் ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது இப்பயிற்சியல் இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சஹ்யாத்திரி, ஐஎன்எஸ் கொல்கத்தா போர்கப்பல்கள் இடம் பெற்றன.
- பழங்குடியினர் கிராமங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் சாலை போடும் திட்டமான பகவான் பிர்சா முண்டா ஜோராஸ்தே திட்டம் மகாராஷ்டிராவில் துவங்கப்பட்டுள்ளது.
- Council of Scientific & Industrial Research (CSIR) மற்றும் National Botanical Research Institute, Lucknow சார்பில் 108 இதழ் கொண்ட தாமரையான நமோ 108 (Namoh 108) என பெயரிடப்பட்ட தாமரை உருவாக்கப்பட்டுள்ளது தாமரையின் அறிவியல் பெயர் நெபுலா லூசிபரா
- விஸ்வதாஸ் விது சப்கல் பொலிவியாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
- அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றுக்கு 21.08.2 முன்னேறி அசத்தினாா். இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச் இதையடுத்து இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனுடன் பிரக்ஞானந்தா இன்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.35 நகர்த்தலில் முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. நாளை கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- செர்பியா வீரரான ஜோகோவிச் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் கோகோ கெளப் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
- நாட்டிலேயே மிகவும் அதிக வயதுடைய ஆசிய வளா்ப்பு யானை பிஜுலி பிரசாத், 89-ஆவது வயதில் அஸ்ஸாம் மாநிலத்தில் 21.08.2023 உயிரிழந்தது.