TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.08.2023:
சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகள்: 2023 -விருது பெற்றவர்கள் விபரம்
- இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, புகழ்பெற்ற கல்லூரிகளிலிருந்து ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் ஏதேனும் ஒன்றில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் 2,000 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். 'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப், ஸ்டெம் படிப்பு காலத்திற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவுகள் மற்றும் படிப்பு பொருட்களை ஈடுசெய்ய உதவும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட்டு வரும் உயா்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் அதன் வளாகங்களை தொடங்க மத்திய அரசு அனுமதித்து, விரைவில் அவை கல்வித் திட்டங்களைத் தொடங்க உள்ள நிலையில் ‘வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்படும் பட்ட தகுதிகளுக்கான சமநிலை தகுதிச்சான்று வழிகாட்டுதல்கள் 2023’ என்ற இந்த வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹூக்ளி நதிக்கரையில் உள்ள காா்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உள்நாட்டில் கட்டப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் விந்தியகிரி போா்க்கப்பலை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.இந்திய கடற்படைக்காக ‘புராஜக்ட் 17 ஆல்ஃபா’ (பி17ஏ) திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 6-ஆவது போா்க்கப்பல் இதுவாகும். இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போா்க்கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2019 முதல் 2022 வரை 5 போா்க் கப்பல்கள் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டன. இப்போது 6-ஆவது போா்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. ‘தற்சாா்பு இந்தியாவின் அடையாளமாக இக்கப்பல் விளங்குகிறது’ என்று அவா் பெருமிதம் தெரிவித்தாா்.
- கோவாவில் அரசு சேவைகளை வீட்டின் வாசலுக்கு சென்று வழங்கும் சேவையானா கிராமின் மித்ரா (Gramin Mitra) திட்டமும், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தருப்பு சிகிச்சைக்கான இலவச சேவையையும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார்.
- வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் மூலம் 12.83 கோடி பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15.08.2018-ல் ஜல்ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டது.
- துரைசாமி LIC நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். LIC – Life Insurance Corpartion 1956-ல் தொடங்கப்பட்ட LIC அமைப்பானது மும்பையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது.
- Deutsche Bank சார்பில் வெளியிட்டுள்ள நிதி சுகாதார அறிக்கையில் முதலிடம் மகாராஷ்டிராஷ்டிராவும், இரண்டாமிடத்தை சத்திஸ்கரும் பிடித்துள்ளன. இவ்வறிக்கையில் மேற்கு வங்காளம் கடைசியிடத்தை பிடித்துள்ளது
- ரூ.4,168கோடி மதிப்பீட்டில் இந்திய ராணுவத்திற்கான ஏஹெச்-64இ ரக 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் போயிங் (Boeing) நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது.
- சுமரி வாலா உலக தடகள சம்மேளனத்தில் துணை தலைவராக தேர்வாகியுள்ளார். உலக தடகள சம்மேளனத்தில் நிர்வாக குழுவின் முதல் உறுப்பினரான முதல் இந்தியர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.
- ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி: அஜர்பைஜான் 10மீ ஏர்பிஸ்டர் ஆடவர் பிரிவில் சிவா நிவாஸ், சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
- உலக வில்வித்தை 4ம் நிலைப் போட்டி – பிரான்ஸ் ரீகர்வ் ஆடவர் அணிகள் பிரிவில் தீரஜ் பொம்ம தேவரா, அதானு தாஸ், துஷால் ஷெல்கே ஆகியோர் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது. ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் அங்கிதா பகத், பஜன் கெளர், சிம்ரன் ஜித் கெளர் ஆகியோர் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது.