TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.08.2023:
சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகள்: 2023 -விருது பெற்றவர்கள் விபரம்
- விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. (40% தங்கம் கலக்கப்பட்ட 3 எடையுள்ள தங்க தாலி)
- மத்திய அரசின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு சோதனைத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) திட்டமிட்டுள்ளது.சோதனை மையமானது, ஸ்ரீபெரும்புதூா் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமாா் 2.3 ஏக்கா் பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் முதல் ட்ரோன் விமான சோதனை மையம் என்ற பெருமையை வல்லம் வடகாலில் அமையவுள்ள மையம் பெறவுள்ளது.
- எம்சி பந்த் குழு (MC Pant Commitee):சுதா மூர்த்தி (இன்போசிஸ்), சங்கர்மகாதேவன் ஆகியோர் அடங்கிய 19பேர் கொண்ட குழுவானது NCERT – புத்தகங்களை சரி பார்க்க அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுநில் மாத்துர் ஆகஸ்ட் 17 பொறுப்பேற்றுக் கொண்டார். Advertisement ஜூலை 2021 முதல் சென்னை புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சுநில் மாத்துர், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார்
- உத்திரபிரதேசத்தின், கான்பூரில் இந்தியாவின் முதல் நீண்ட தூர ரிவால்வரான பிரபால் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் குஜராத்தின் காந்திநகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்தும் உலகளாவிய உச்சி மாநாடு நடைபெறுகிறது.
- ஜார்ஜ் ஜெட்லி விருது : இந்திய அமெரிக்க பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ராஜ்செட்டிக்கும், உயிரியல் பேராசிரியரான மைக்கேல் ஸ்பிரிங்ளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- யு 20 உலக மல்யுத்த போட்டி: ஆடவர் 61கிலோ பிரிவில் அமித்குமார் தங்க பதக்கமும் ஆடவர் 74கிலோ பிரிவில் ஜெய்தீப் – வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்
No comments:
Post a Comment