TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.08.2023:
- சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த, பிரதமரின் மின் பேருந்து சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரூ. 57,613 கோடி செலவில் 10,000 மின்சாரப் பேருந்துகளின் சேவையைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதியானது இனி விடியல் பயணம் என அழைக்கப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த்துள்ளார்.08.05.2022-ல் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி (விடியல் பயணம்) தொடங்கப்பட்டது
- செப்டம்பர் 17-ல் விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி திட்டமான பிரதான் மந்திரி விஸ்வகர்மா கெளஷல் சம்மான் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கப்பட உள்ளது.
- மனித உரிமைகள், சுற்றுச்சூால் தூய்மை, கழிவு மேலாண்மை, கல்வி ரீதியிலான சீர்திருத்தம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சுலப் இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனர் பிந்தேஸ்வர் பாடக் காலமானார்.1970-ல் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழிக்கும் தொலை நோக்கு பார்வையுடன் சுலப் கழிவறைகள் கட்ட வழிவகுத்தவர்
- தில்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- ஆகஸ்ட் 16-ல் மதுரையில் டி.எம்.செளந்தராஜனின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்
- நூற்றாண்டு காலமாக பாரம்பரிய திறன்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகையான கைவினைக் கலைஞா்களுக்கு ‘பிஎம் விகாஷ்’என்கிற பிரதமரின் விஸ்வகா்மா கௌசல் சம்மன் யோஜனா திட்டம் வருகின்ற செப்டம்பா் 17 -ம் தேதி தொடங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.விஸ்வகா்மா கௌசல் சம்மன் யோஜனா திட்டம்
- சுதந்திர தின நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் அன்னபூர்ணா மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கும் திட்டட்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். இந்த மளிகைப் பொருள் தொகுப்பில் துவரம் பருப்பு, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த மளிகைப் பொருள் தொகுப்பு ஒன்றுக்கு ரூ.370 அரசுக்கு செலவாகிறது. இதன்மூலம், அரசுக்கு மாதத்துக்கு ரூ.392 கோடி செலவாகும். இந்தத் திட்டம் முதல்வரின் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார். 55 வயதாகும் இவர், தமிழில் ரஜினியுடனான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஓஎம்ஜி -2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் கனடா நாட்டுரிமை கொண்டவர். இதற்காக அக்ஷய் குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இந்திய நாட்டு குடியுரிமை கிடைத்துள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் கழிப்பறை மனிதர் என அறியப்பட்ட பிந்தேஷ்வர் பதக் இன்று (ஆகஸ்ட் 15) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். Advertisement தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்னதாகவே இந்தியாவில் பொதுக் கழிப்பறைகள் அதிக அளவிலான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்.பிந்தேஷ்வர் பதக் 1970 ஆம் ஆண்டு சுலாப் இண்டர்நேஷனல் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு சுகாதாரம் சார்ந்த நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். திறந்தவெளி மலம் கழித்தலுக்கு எதிராக அவர் பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். அவரை ‘சானிடேசன் சாண்டா கிளாஸ்’ எனவும் அழைக்கின்றனர்.அவரது சுலாப் இண்டர்நேஷனல் மனித உரிமைகள், சமுதாய சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது. அவரது இந்த சேவைகளுக்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.