TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.08.2023
- நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியல் கல்லூரி மின்னியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை இறுதி ஆண்டு படிக்கும் மாணவரான எம்.கிருஷ்ணமூர்த்தி சுயஉதவிக்குழுத் தொழில் முனைவோருக்கான செயலியை உருவாக்கியுள்ளார்.
- செங்கல்பட்டு அருகே அழகுசாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க தமிழக அரசு மற்றும் கேத்ரேஜ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது.
- தமிழகஅரசின் அகர முதலி திட்ட இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட சொற்குவையில் பயனர் எண்ணிக்கை 2 லட்சமாகவும், கலைச்சொற்கள் 12 இலட்சமாகவும் அதிகரித்துள்ளது.
- ஜம்மு-காஷ்மீர், குப்வாரா மாவட்டம் கிஷன் கங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் கடைசி தபால் நிலையமான கேரான் தபால் நிலையம் நாட்டின் முதல் தபால் நிலையமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- பிரிட்டனிற்கு சுற்றுபயணம் செயன்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே சேண்ட்ஹர்ஸ்ட் ராணுவ பயிற்சி அகாதமி பயிற்சி நிறைவு செய்த 200 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி கலந்து கொண்டார்.அரசர் சார்லஸ்க்கு பதிலாக இறையாண்மையின் பிரதிநிதி என்ற சிறப்புடன் பங்கேற்ற்றுளார். இதன் மூலம் இச்சிறப்பை பெறும் முதல் இந்ததிய பிரதிநிதி என்ற பெருமையை பெற்றுளார்.
- அர்ஜீன் ராம் மேக்வாலால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்கள் நியமன மசோதா 2023 மாநிலங்களையில் அறிமுகம் செய்யப்பட்டது.பிரதமர் தலைமையிலான தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதில் மக்களவை எதிர்கட்சி தலைவரும், ஒன்றிய அமைச்சரும் இடம்பெறும் மசோதாவாகும்
- கிரிஷி-RASTAA (பூ-விஷன்): மண் பரிசோதனை செய்ய உதவும் இணைய உலகம் அடிப்படையிலான தானியங்கு மண்பரிசோனை மற்றும் ஆலோசனை தளம் ஆகும்.
- சன்ஜார் சாத்தி (Sanchar Saathi) செயலி மூலம் கைபேசிகளை முடக்கிய மாநிலங்கள் வரிசையில் முதலிடம் தெலுங்கானாவும், இரண்டாம் கர்நாடகாவும், மூன்றாமிடம் ஆந்திராவும் பிடித்துள்ளன.சன்ஜார் சாத்தி என்பது திருடு போன கைபேசிகளை கண்டறிய, முடக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.
- மேகாலயாவைச் சேர்ந்த 29 மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறுகின்றனர்.2022 செப்டம்பரில் இரு அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அவர்கள் அனைவரும் உயிர் காக்கும் மயக்க மருந்து திறன்கள், அவசரகால மகப்பேறு பராமரிப்பு மற்றும் அல்ட்ரா சோனோகிராம் ஆகியவற்றிற்காக பயிற்சி பெற்றனர்.
No comments:
Post a Comment