Friday, August 11, 2023

'நான் முதல்வன்' ஊக்கத்தொகை-யுபிஎஸ்சி தேர்வர்கள் ரூ.25,000

 


யுபிஎஸ்சி தேர்வர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

யுபிஎஸ்சி தேர்வர்கள் 'நான் முதல்வன்' ஊக்கத்தொகைத் திட்டப் பிரிவில், யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசால் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்!' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், 'நான் முதல்வன்' ஊக்கத்தொகைத் திட்டப் பிரிவில், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

SOURCE: DINAMANI 

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: