TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.08.2023
- மாணவர்களால் எழுதப்பட்ட நூலான Developing Stories-யை மேயர் ஆர்.பிரியா வெளியிட்டுள்ளார்.இந்நூலானது மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் எழுதுப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ‘உன்மேஷா’ சர்வதேச இலக்கிய விழா மற்றும் ‘உத்கர்ஷ்’ நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகளை இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
- டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவிற்கு மகராஷ்டிர அரசால் உத்யோக் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஒன்றிய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது
- கேம்ஸ் 24 x 7 மற்றும் கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள குழந்தைகள் கடத்தலுக்கான மாநிலங்கள் பட்டியலில் உத்திரபிரதேசம் முதல் இடம் வகிக்கிறது.இரண்டாம் இடத்தை பீகாரும், மூன்றாம் இடத்தை ஆந்திராவும் பிடித்துள்ளன.குழந்தைகள் கடத்தலுக்கான மாவட்டங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் முதல் இடம் வகிக்கிறது.
- கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வக பல்கலைகழத்தில் மீன்வள அடல் வளங்காப்பு மையம் அமைக்க நிதி ஆயோக் சார்பில் ரூ.10கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் மீன்வள அடல்வளங்காப்பு மையம் செயல்பட உள்ளது.
- 169 ஆண்டுகள் பழமையான மும்பையின் பைகுல்லா இரயில் நிலையத்திற்கு 2022ஆம் ஆண்டிற்கான யுனஸ்கோ ஆசிய பசுபிக் கலாச்சார பாரம்பரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஜெர்மெனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னித் கெளர் ஆகியோர் காம்பவுண்ட மகளிர் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
- S&P Global இன் அறிக்கை “முன்னோக்கிப் பார்: இந்தியாவின் தருணம்” இந்தியா FY24 முதல் FY31 வரை ஆண்டுக்கு சராசரியாக 6.7% என்ற விகிதத்தில் வளர்ந்து, வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ளது.